தென்னிந்தியதிரைப்படஒளிப்பதிவாளர்கள் சங்கம் SICA சார்பாக கடந்த 9 ஆண்டுகளாக சிறந்தபடங்கள், கதாசிரியர்கள், இயக்குநர்கள், நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் தொழில்நுட்பக்கலைஞர்களில் சிறந்த படைப்புகளை அளித்தவர்களை தேர்ந்தெடுத்து சிகாஅவார்ட்ஸ் (SICA Awards) என்ற பெயரில் விருதுகளை வழங்கி வருகிறது.
10-வது ஆண்டின் இந்த சிகாஅவார்ட்ஸ் வழங்கும் விழா மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூர் நகரில்உள்ள நெகரா கலையரங்கில் மாபெரும் நட்சத்திரத் திருவிழாவாக வரும் ஜனவரி 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் மிகப் பிரம்மாண்டமாக உலகத்தரத்தில் நடக்கவுள்ளது.
இதுவரைதமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடமொழிப் படங்களுக்கு மட்டுமேவிருதுகள் வழங்கப்பட்டு வந்தன. இப்போது முதல்முறையாக இந்தி மொழிப் படங்களுக்கும் சேர்த்து விருதுகள் வழங்கப்பட உள்ளன. மேலும், இந்தவிழாவில் தமிழ் சின்னத்திரை நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தொழில் நுட்பக்கலைஞர்களையும் தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கப்படுகின்றன.
இந்தவிருதுகள் பெறும் கலைஞர்களைத் தேர்ந்தெடுக்க, தமிழில் இயக்குநர் பாரதிராஜா தலைமையில் இயக்குனநர்கள் பாக்கியராஜ், விக்ரமன், ஆர்.கே.செல்வமணி, சுரேஷ்கிருஷ்ணா மற்றும் ஒளிப்பதிவாளர்கள் மதுஅம்பாட், என்.கே.விஸ்வநாதன், ராபர்ட் மற்றும் இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார் ஆகியோர் கொண்ட தேர்வுக்குழு அமைக்கப்படுகிறது.
இந்த மாபெரும் நட்சத்திரகலைவிழாவில் தமிழிலிருந்து கமலஹாசன், தெலுங்கு மொழியிலிருந்து பாலகிருஷ்ணா, மலையாள மொழியிலிருந்து மம்மூட்டி, மோகன்லால், கன்னடமொழியிலிருந்து புனித்ராஜ்குமார், இந்தி மொழியிலிருந்து தர்மேந்திரா ஆகியோர் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்க இருக்கிறார்கள்.
மேலும், விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ் உள்ளிட்ட நடிகர்களும், ராதிகா, குஷ்பு, ஹன்சிகாமோத்வானி, சுருதிஹாசன் உள்ளிட்ட நடிகைகளும் இசையமைப்பாளர் இளையராஜா, விஜய்ஆண்டனி, யுவன்சங்கர்ராஜா, ஹாரிஸ்ஜெயராஜ், அனிருத்உள்ளிட்ட இசையமைப்பாளர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள்.
இந்த மாபெரும் நட்சத்திரக்கலைவிழாவில் பிரபல நடிக-நடிகையர்கள் பங்குபெறும் கலைநிகழ்ச்சிகளும், பிரபல இசையமைப்பாளர்கள் பங்குபெறும் இன்னிசைக் கச்சேரியும் நடைபெற உள்ளன. இவிவிழாவை இயக்குநர் சங்க பொதுச்செயலாளர் ஆர்.கே.செல்வமணி வடிவமைப்பாளராக பொறுப்பேற்று நடத்துகிறார். அவருடன் இயக்குநர்கள் சங்கத்தைச்சார்ந்த இயக்குநர்களும் பணியாற்றுகின்றனர்.
இந்த பிரம்மாண்டவிழாவை ஒளிப்பதிவாளர் சங்கசெயலாளர் மற்றும் பெப்சி சம்மேளனத்தின் தலைவர் சிவா பொறுப்பேற்று நடத்துகிறார். அவருடன் தலைவர் என்.கே.விஸ்வநாதன், ராபர்ட், மதுஅம்பாட் இன்னும் பல முன்னணி ஒளிப்பதிவாளர்கள் பங்கேற்றுப் பணியாற்றுகிறார்கள்.
இந்த விழாவின் மூலம் திரட்டப்படும் நிதியை சங்கத்தின் முதுகெலும்பாக பணியாற்றிய உறுப்பினர்களுக்கு நலநிதியும், நலஉதவியு ம்உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்விஉதவிநிதியும் முதியோர்களுக்கு ஓய்வுஊதியமும் மற்றும் மருத்துவ உதவிநிதியும் வழங்கத் திட்டமிட்டுள்ளது.