சாதிக்க வயது ஒரு தடையில்லை என நிரூபித்த மூத்தோருக்கான தடகள போட்டிகள்!

Chennai District Masters Athletic Association’ தங்களது 36 வது தடகள சந்திப்பு சமீபத்தில் புகளூரில் நடத்தினர் . இது 35 முதல் 90 வயதினருக்கான தடகள சந்திப்பாகும். சென்னையை சேர்ந்த 185  தடகள வீரர்களும் , ஒட்டுமொத்தமாக எல்லா மாவட்டங்களையும் சேர்த்து 1600 நபர்கள் பங்கேற்றனர்.   இதில் 52 பெண் போட்டியாளர்கள் 37 தங்க பதக்கங்களும் , 24 வெள்ளி பதக்கங்களும் , 15 வெண்கல பதக்கங்களையும் வென்றனர். ஆண்கள் பிரிவில் 133 போட்டியாளர்கள் 24 தங்க பதக்கங்களும் , 33 வெள்ளி பதக்கங்களும் , 20 வெண்கல பதக்கங்களும் வென்றனர். சென்னை மாவட்டம் , ”பெண்கள் சாம்பியன்ஷிப்’ ‘ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்’ மற்றும் ‘மேடம் ஜெயலலிதா கோப்பை’ ஆகியவற்றை வென்றது. போட்டிகளில்  முதல் இரண்டு இடங்களை பிடித்த வீரர்கள் பிப்ரவரி மாதம் பெங்களூரில்  நடைபெறவுள்ள இந்திய அளவிலான நேஷனல் தடகள மீட்டில் தமிழ்நாட்டு அணி சார்பாக பங்கேற்கவுள்ளனர். 
 
திரு. W.I.தேவாரம் மற்றும் I.P.S ப்ரெசிடெண்ட் TNMAA ஆகியோர் இந்த தடகள மீட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். ‘Chennai District Masters Athletic Association’ ப்ரெசிடெண்ட் திரு.ஷெண்பகமூர்த்தி பேசுகையில் , ” இவ்வாறான நிகழ்ச்சிகள் மூத்த குடிமக்களின் நலனை மேன்படுத்தும். இது போன்ற  தடகள போட்டிகள்  நமது நாட்டில்  இன்னும் பல ஆண்டுகாலம் வெற்றிகரமாக நடக்கும் என்பதை பங்கேற்றவர்கள் ஆதரவும், உற்சாகமும் நிரூபித்துள்ளது ”.