தனது பிறந்தநாளான இன்று, “அண்டர்டாக் ஃபிலிம்ஸ்” (Underdog Films) எனும் புதிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை சிபிராஜ் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளார்.
இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘புரொடக்ஷன் நம்பர் 1’ (Production No.1) திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் பிளாக்பாஸ்டர் வெற்றியைப் பெற்ற ‘ஜீப்ரா’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஈஷ்வர் கார்த்திக் இத்திரைப்படத்தை இயக்குகிறார்.
இப்படத்தில் சிபிராஜ் கதாநாயகனாக நடிப்பதுடன், அவரே தயாரித்தும் வருகிறார். இதன் மூலம் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் தனது திரைப்பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார் சிபிராஜ்.
சிபிராஜ் மற்றும் ஈஷ்வர் கார்த்திக் கூட்டணியில் உருவாகும் இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் கதை, வகை (Genre) மற்றும் பிற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் தற்போது இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. விரைவில் படக்குழுவினரின் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது.


