‘தர்மதுரை’ படத்தின் 100-வது நாள் விழாவும், ‘அட்டு’ படத்தின் இசை வெளியீட்டு விழாவும் வடபழனி கமலா திரையரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ‘தர்மதுரை’ படத்தில் நடித்தவர்கள், படக் குழுவினர் , தொழில் நுட்பக் கலைஞர்கள்,படத்தில் பல்வேறு வகையில் பணியாற்றியவர்கள் , விநியோகஸ்தர்கள் அனைவருக்கும் கேடயங்கள் வழங்கப்பட்டன.
தயாரிப்பாளர் சங்கத் தலைவரான கலைப்புலி எஸ்.தாணு அனைத்து கலைஞர்களுக்கும் இந்தக் கேடயங்களை வழங்கிக் கெளரவித்தார்.ஸ்டுடியோ 9 மியூசிக் லோகோவையும் அட்டு படத்தின் டீஸரையும் தாணு வெளியிட்டார்.
விழாவில் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் பேசும் போது,”எனக்கு இதில்அருமையான பாத்திரம் கிடைத்தது நன்றி. ” என்றார்.
நடிகர் ராஜேஷ் பேசும் போது,” தர்மதுரை’ படத்திற்கு நல்ல தயாரிப்பாளர், நல்ல இயக்குநர், நல்ல பாத்திரம் எல்லாம் அமைந்தன. சீனு ராமசாமி கதை சொல்லும் போது சாதாரணமாகத் தெரியும்.ஆனால் காட்சிகள் திரையில் அழகாக இருக்கும். என்னை எல்லாரும் பாராட்டும்படி யதார்த்தமாக நடிக்க வைத்தார் . ” என்றார்.
நாயகன் விஜய் சேதுபதி பேசும் போது,” எனக்கு சந்தோஷத்தில் எதுவுமே சொல்லத் தோன்ற வார்த்தைகள் வரவில்லை ” என்றார்.
இயக்குநர் சீனு ராமசாமி பேசும் போது,”
”நான் சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகி விட்டன. இந்த 100வது நாளுக்காகத் தான் இவ்வளவு நாள் காத்திருந்தேன் என நினைக்கிறேன்.
இந்தக் கதையை நான் அவரிடம் சொன்னதிலிருந்து ஆர்.கே.சுரேஷ் படத்தை தன் தோளில் தூக்கிச் சுமந்தார். வைரமுத்து ஆடியோ விழாவுக்கும் அழைத்தோம் வரவில்லை. இதற்கும் அழைத்தோம் வரவில்லை.ஏனென்று தெரியவில்லை . அவர் எழுதிய பாடல்கள் படத்துக்குப் பெரிய பலமாக இருந்தன.நாயகன் விஜய் சேதுபதி இந்தப்படத்தில் காட்டிய அக்கறை கொடுத்த ஒத்துழைப்பு சாதாரணமானதல்ல. ” என்றார்.
விழாவில் கமலா சினிமாஸ் அதிபர் கணேஷ். ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்டுடியோ 9 தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ், ஒளிப்பதிவாளர் சுகுமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கமலா சினிமாஸ் சார்பிலும் கலைஞர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது.