சந்தை பொருளாதாரத்தின் (GLOBALISATION) ஆக்டோபஸ் போன்ற இரும்பு கரங்களில் பண்பு, பாசம், புனிதம், நட்பு போன்ற பண்பாட்டு அடையாளங்கள் சிக்கி தவித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் மிதமிஞ்சி இருப்பது நல்ல மனிதர்களின் அன்பு மட்டுமே.அதைப் பற்றிப்பேசும் படம் தான் ஸ்ரீ சாய் சண்முகர் பிக்சர்ஸ் என்னும் புதிய நிறுவனம் தயாரிக்கும் ‘அய்யனார் வீதி’.
தென்மாவட்டங்களில் உள்ள பெரிய கிராமமான, இராஜபாளையம் அருகில் உள்ள “அய்யனார் வீதி” மக்களை சமூக விரோதிகளிடம் இருந்து காப்பாற்றுவதே கதைக்களம். அந்த கிராமம், சமூகத்தின் கோரப்பிடியில் இருந்து ஆயுதங்களால் மீட்கப்பட்டதா ? அல்லது அன்பால் மீட்கப்பட்டதா ? என்பதாக கதை நகர்கிறது.
இப்படத்தின் கதை நாயகர்களாக கே.பாக்யராஜ் மற்றும் பொன்வண்ணன், இதுவரை ஏற்று நடித்திராத கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.படத்தின் இளம் கதாநாயகனாக யுவன், புதுமுக நாயகிகளாக சாரா ஷெட்டி,சிஞ்சு மோகன் நடிக்கிறார்கள்.இவர்களோடு முன்னணி நட்சத்திரங்களான சிங்கம்புலி, முத்துக்காளை, ராஜா, மீரா கிருஷ்ணன், சாய்பிரியா ஆகியோர் மின்னுகின்றனர்.வில்லனாக தாஸ் பாண்டியன் அவர்கள் நடிக்க, மிகக்கொடூரமான வில்லனாக மருது கதாபாத்திரத்தில் படத்தின் தயாரிப்பாளர் P.செந்தில்வேல் அறிமுகமாகிறார்.
காமெடியரன்களாக மதுரையைச் சேர்ந்த நான்கு நடிகர்கள் அறிமுகமாகிறார்கள்.
இப்படப்பிடிப்பு இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகள், மதுரை, சென்னை அதன் சுற்றுபுறங்கள், மூணாறு, கொடைக்கானல், குற்றாலம் ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டது.
இப்படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள் இடம் பெறுகின்றன. முக்கியமாக நூறாண்டு கால சினிமா வரலாற்றில் காவல் தெய்வத்துக்கென 108 அய்யனார் பற்றி சொல்லியிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இப்படத்தில் இரண்டு சண்டை காட்சிகளும், சேஸிங் காட்சிகளும் மிகப்பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது.
ஒரு குத்தாட்டப் பாடலுக்கு வட மாநிலத்தின் முன்னணி டான்சரான சிநேகா தாபா அவருடன் ஜோடியாக வில்லன் மருது இப்பாடலில் ஆடியுள்ளார்..
தொழில்நுட்ப கலைஞர்கள் கதை – R.பாஸ்கரன், திரைக்கதை – வசனம் – இயக்கம் – ராஜ்குமார் ஜிப்ஸி
ஒளிப்பதிவு – சக்திவேல், இசை – U.K.முரளி, தயாரிப்பாளர் – P.செந்தில்வேல்
படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் உள்ள இத்திரைப்படம் பிப்ரவரி மாதம் திரையிடப்படுகிறது