
பசியால் வாடும் பட்டாசு தொழிலாளர் குடும்பத்திற்கு உதவிய விருதுநகர் ( மே ) தளபதி விஜய் மக்கள் இயக்கம் !
தளபதி விஜய் ரசிகர்கள் தங்களால் முயன்ற நிதியுதவியும் , அத்யாவசிய பொருட்களும் ஊரடங்கினால் வருவாய் இழந்து அவதிப்படும் ஏழை மற்றும் எளிய மக்களுக்கு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று புதியதலைமுறை செய்தி மூலம் சிவகாசி அருகே உள்ள சிவகாமிபுரம் கிராமத்தில் வசிக்கும் பசியால் வாடும் ஏழை பட்டாசு தொழிலாளர் குடும்பத்திற்கு உதவி தேவைபடுவதை அறிந்து 10 நாட்களுக்கு தேவையான காய்கறிகள், அரிசி, மற்றும் மளிகை பொருட்கள் விருதுநகர் மேற்கு மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்க இளைஞரணி தலைவர் மாரிசெல்வம் வழங்கினார்.