பாரிவேந்தர் நல்லவர் அவர் கருணை உள்ளமும், வள்ளல் குணமும் கொண்டவர் என அவருக்கு ஆதரவாகத் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் மற்றும்
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பாகவும் அன்பான
உங்கள் மூலமாக தமிழ் மக்களுக்கும், சமூக தலைவர்களுக்கும்,
அரசியலமைப்பை சேர்ந்தவர்களுக்கும் மற்றும் அனைத்து பிரிவினருக்கும்
நாங்கள் ஒரு செய்தியை தெரிவிக்க கடமைப் பட்டுள்ளோம்.
SRM குழுமத்தின் நிறுவனர் திரு.பாரிவேந்தர் அவர்களின் மீது சமீப
காலமாக சில தவறான கருத்துக்கள் செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன.
திரு.பாரிவேந்தர் அவர்கள் எங்களை பொறுத்த வரையில் கருணை உள்ளமும்,
வள்ளல் குணமும் கொண்டவர்.
அவர் எங்களது தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தை
சேர்ந்த தொழிலாளர்கள் 25 ஆயிரம் பேருக்கும், எங்களது இயக்குநர்கள்
சங்கத்தை சேர்ந்த 2500 உறுப்பினர்களுக்கும் மற்றும் அவர்களது அம்மா, அப்பா,
அண்ணன், தம்பி, அக்கா, தங்கை என அனைத்து குடும்பத்தினருக்கும் இலவச
மருத்துவ சிகிச்சைகள் அளிக்கிறார்.
இதய அறுவை சிகிச்சை, மாற்று சிறுநீரக சிகிச்சை, மூளை சம்பந்தப்பட்ட
அனைத்து சிகிச்சைகள் உட்பட பல சிகிச்சைகளுடன் மாத்திரை மருந்துகளையும்
இலவசமாக அளிக்கிறார்.
அத்துடன் நோயாளியுடன் மருத்துவமனையில் தங்கியிருப்பவர்களுக்கும்
உணவு மற்றும் தங்குமிடம் இலவசமாக அளிக்கிறார். இதன் மூலம் பல கோடி
ரூபாய் பெறுமான உதவிகளை கருணை உள்ளத்தோடு திரைப்படத்
துறையினருக்கும் எந்த விதமான பிரதிபலனையும் எதிர் பாராமல் தொடர்ந்து
உதவிகள் செய்து வருகிறார்.
இத்துடன் வருடா வருடம் எங்கள் சங்க உறுப்பினர்கள் வாரிசுகளுக்கு
அவரது SRM கல்லூரியில் பொறியியல், கலை, அறிவியல் படிப்புகளுக்கான
இலவச சீட்டுகள் கொடுத்து உதவிகள் செய்து கொண்டிருக்கிறார்.
எனவே, இதுபோன்ற பல நற்பணிகளை செய்து வருகின்ற
திரு.பாரிவேந்தரைப் பற்றி வரும் செய்திகள் தவறாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம்.’ இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.