சினிமாவில் வாய்ப்பு தேடுவது , போராடுவது தொடர்பான கதை ஒன்று படமாகியுள்ளது அதுதான் ‘கள்ளப்படம்’.
இயக்குநர் மிஷ்கினின் உதவியாளர் ஜெ.வடிவேல் இயக்கியுள்ளார்
இப்படத்தின் இயக்குநர் ஜெ.வடிவேல், ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் சந்தோஷ், இசையமைப்பாளர் கே, எடிட்டர் காகின் இந்த நால்வரும் படக்குழுவின் பிரதான தூண்களாக இருப்பவர்கள். இவர்களே திரையில் தோன்றும் முக்கிய பாத்திரங்களை ஏற்றுள்ளனர்.’ சுட்டகதை’. லட்சுமி பிரியாதான் நாயகி.ஆடுகளம் நரேன், சிங்கம்புலி, செந்தில், செப் தாமு ஆகியோரும் நடித்துள்ளனர்.
‘கள்ளப்படம்’ ஊடக சந்திப்பு நேற்றுமாலை நடந்தது. நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஆனந்த் பொன்னிறைவன் பேசும் போது ” நான் திருச்சியைச் சேர்ந்தவன். ஆஸ்திரேலியாவில் டாக்டராக இருக்கிறேன். ஒரு ரசிகன் என்ற வகையில்தான் எனக்கு சினிமாவைத் தெரியும். இந்த சினிமாவுக்கு என்னை ஒரு தயாரிப்பாளராக கண்டுபிடித்தது இந்தப் படக்குழுதான். நாங்கள் இன்னும் நண்பர்கள் போலவே இருக்கிறோம். ”என்றார்.
இயக்குநர் வடிவேல் பேசும் போது.. ””சினிமாவில் ஜெயித்தவர்களை மட்டுமே பார்ப்பார்கள் .அவர்களை மட்டுமே பேசுவார்கள்,. அவர் எப்படி ஜெயித்தார் என்று யாரும் பார்ப்பதே இல்லை.சினிமாவில் வாய்ப்புக்காகப் போராடும் 4இளைஞர்களின் கதைதான் இது
இப்படத்தை நல்ல உயரம் தேடி உழைக்கும் எந்தத் துறை இளைஞர்களாலும் தங்களைத் தொடர்பு படுத்தி ரசிக்க முடியும்., உணரமுடியும் ” என்றார்.
‘கள்ளப்படம்’ திரைப் படத்தில் வாய்ப்பில்லாமல் இருக்கும் நடிகையாக நடிக்கிறார் ‘சுட்டகதை’ .
லட்சுமி ப்ரியா கதாபாத்திரம் குறித்து படத்தின் இயக்குநர் வடிவேல் கூறும்போது, ”லட்சுமி ப்ரியா மிக நேர்த்தியான நடிகை. இப்படத்தில் வாய்ப்பில்லாமல் இருக்கும் நடிகையாக லீனா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். முழுக்க முழுக்க நடிப்பிற்கு முக்கியத்துவம் உள்ள இந்த கதாப்பாத்திரம் லட்சுமி ப்ரியா செய்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினேன். லட்சுமி ப்ரியா இந்தப் பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தினார். இந்தக் கதாப்பாத்திரம் படத்தில் தன் சூழ்நிலையை மாற்ற பல தைரியமான முடிவுகளை மேற்கொண்டு வரும் ”என்றார்.
நாயகி லட்சுமி பிரியா பேசும் போது “நான் நடித்த முதல்படம் ‘சுட்டகதை’ வெளிவரும் முன்பே என்னை நம்பி இந்த வாய்ப்பு தந்த இயக்குநருக்கு நன்றி. வடிவேல் இந்தக் கதாப்பாத்திரத்தைப் பற்றி கூறும்பொழுதே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நடிப்பதற்கு வாய்ப்புள்ள ஒரு கதாப்பாத்திரம். இது இல்லாமல் கதையில்லை என்றளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ரோல். எனக்கு நந்திதா தாஸ் போல் தைரியமான கதாப்பாத்திரங்களில் நடிக்க பிடிக்கும். கள்ளப்படத்தில் லீனாஅத்தகைய ஒரு தைரியமான பெண் என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தந்தது.படத்தில் பணியாற்றிய எல்லாரும் ஆண்கள். நடிகை நான் மட்டும்தான். எல்லாரும் இது பற்றிக் கேட்கிறார்கள். சினிமாவில் ஆண் பெண் பேதமில்லை.
அவரவர் அவர்கள் வேலையைப் பார்த்தார்கள் .நான் என் வேலையைப் பார்த்தேன் .இதில் எனக்கு எந்த அசௌகரியமும் இல்லை. வசதியாக இருந்தது. இப்படி நடித்தது பற்றி எனக்கு சங்கடமில்லை. நிறைய கற்றுக் கொண்டேன். ”என்றார்.
நடிகர் நரேன் பேசும் போது.” வடிவேல் என்னிடம் கதை சொன்னார். பிடித்திருந்தது. நான் இதில் ஒரு தயாரிப்பாளராக நடித்திருக்கிறேன். முன்பு தயாரிப்பாளராக நடித்திருந்தாலும் இதில் புதுமாதிரி இருக்கும். மறக்க முடியாத அனுபவம் “என்றார்.
ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் சந்தோஷ், இசையமைப்பாளர் கே, எடிட்டர் காகின் , கவிதாபாரதி ஆகியோரும் பேசினர்.
‘கள்ளப்படம்’ வருகிற 20 ஆம் தேதி திரைக்கு வருகிறது .