ஏ.ஆர்.ரஹமான் இசையமைக்கிறார்
பல படங்களில் தன்னுடைய ஆழமான நடிப்பாலும், அழகாலும் அனைவரையும் வசீகரித்தவர் நடிகை ஸ்ரீதேவி. பல நடிகர் நடிகைகளின் கனவாகத் திகழும் ஸ்ரீதேவி பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட பிறகு தனது திரையுலகப் பயணத்திற்கு சிறிது காலம் ஓய்வு கொடுத்தார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’, ‘புலி’ படங்களின் மூலமாக தனது நடிப்புக் கலையை தொடர்ந்த ஸ்ரீதேவி, தற்போது “மாம்” (அம்மா) எனும் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படத்தின் முதல் போஸ்டரை நடிகை ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி மற்றும் குஷி இணையதளத்தில் வெளியிட்டனர்.
இறுதி கட்டத்தை எட்டியுள்ள “மாம்” (அம்மா) திரைப்படம் வரும் ஜூலை மாதம் 14ம் தேதி Zee ஸ்டுடியோஸ் உலகமெங்கும் இப்படத்தை வெளியிடுகின்றது.