தான் இயக்கும் ‘வில்லாதி வில்லன் வீரப்பன்’ பற்றி ராம் கோபால் கூறுகிறார்:
தமிழகத்தை உலுக்கிவந்த கொள்ளையன் வீரப்பனின் வாழ்க்கைப் பின்னணியையும்,
வீரப்பனை வீழ்த்த போலீஸார் நடத்திய ஆபரேஷன் குக்கூன் பற்றியதுமே இந்த படம். இந்தப் படத்தின் கதை கண்ணண் என்ற போலீஸ் உயர் அதிகாரியை சுற்றி நகர்கிறது. கண்ணன்
துணிச்சலான போலீஸ்காரர். வீர்ப்பனை பிடிப்பது மட்டுமே அவரது ஒரே இலக்கு. போரில்
எதுவும் தவறில்லை என்பதுபோல் வீரப்பனை பிடிக்க வேண்டும் இலக்கை எட்ட பல
சமரசங்களை செய்து கொள்கிறார் கண்ணன். படத்தின் ஆரம்ப காட்சியே ஆபரேஷன்
குக்கூன் திட்டம் தீட்டப்படுவதை விவரிக்கிறது. ஆபரேஷன் குக்கூன் கமாண்டராக இருந்தவர்
விஜயகுமார். அவரது திட்டத்தை செயல்படுத்த நியமிக்கப்பட்டவரே கண்ணன். அடுத்தடுத்த
காட்சிகள் வீரப்பனுக்கு விரிக்கப்படும் வலை குறித்ததே. முதல் திட்டமாக பிரியா என்ற ஒரு பெண்ணை நியமிக்கிறார் கண்ணன். அவர், வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியை நெருங்கிய
தோழியாக மாறுகிறார். பிரியா மூலம் வீரப்பன் மறைவிடத்தை அறிந்து அவரை நெருங்குவதே போலீஸின் திட்டம். அத்திட்டத்தில் போலீஸ் அதிகாரி கண்ணன் வெற்றி பெறுகிறாரா என்பதே முழுக்கதையும்.” என்கிறார்.