கவுதமி நடிக்கும் அடுத்த படம்!

gowthamiமோகன்லால் – கவுதமி ஜோடி சேர்ந்து நடிக்க மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழில் ஒரு படம் தயாராகிறது. தெலுங்கில் அந்தப் படத்திற்கு “ மனமன்தா “ என்றும் தமிழில் “ நமது “ என்றும் பெயர் சூட்டி உள்ளார்கள்.

சாய் ஷிவானி வழங்க, வாராஹி சலனசித்திரம் மற்றும் சாய் கோரப்பட்டி புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் தயாரிக்கிறது.

மலையாளத்தில் அமோக வெற்றி பெற்ற ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா படத்தில் ஜோடி சேர்ந்த மோகன்லால் – கவுதமி ராசியான ஜோடி என்று கேரளாவில் கூறப் படுவதுண்டு.

விஸ்வநாத்  – ஹனிஷா ஆம்ரோஷ் இன்னொரு ஜோடியாக நடிக்கிறார்கள்.

நாசர், ஊர்வசி, சந்திரமோகன், கொல்லப்புடிமாருதிராவ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

வசனம் மற்றும் பாடல்களை மதன்கார்க்கி எழுதுகிறார்.

ஒளிப்பதிவு   –  ராகுல் ஸ்ரீவத்சவ்

இசை   –  மகேஷ் சங்கர்

தயாரிப்பு   –  ரஜினி கோரப்பட்டி

எழுதி இயக்குபவர் சந்திரசேகர் ஏலட்டி. இவர் தெலுங்கில் கோபிசந்த் உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்த படங்களை இயக்கி இருப்பவர்.

படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.