“லிபரா நட்சத்திர கிரிக்கெட்” திருவிழா ஒரு ரிப்போர்ட்!

IMG_4067நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கு நிதி திரட்டுவதற்காக, “லிபரா நட்சத்திர கிரிக்கெட்” சென்னையில் நடத்தப்பட்டது. காலை 10 மணிக்கு சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டிகள் தொடங்கப்பட்டன. போட்டியை ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.

1. சென்னை சிங்கம்ஸ்–சூர்யா

2. மதுரை காளைஸ் – விஷால்

3. கோவை கிங்க்ஸ்– கார்த்தி

4. நெல்லை டிராகன்ஸ் – ஜெயம்ரவி

5. சேலம் சீட்டாஸ் – ஆர்யா

6. தஞ்சை வாரியர்ஸ் – ஜீவா

7. ராம்நாடு ரைனோஸ் – விஜய் சேதுபதி

8. திருச்சி டைகர்ஸ்– சிவகார்த்திகேயன்

ஆகிய 8 அணிகள் மோதின. ‘நாக் அவுட்’ முறையில் இந்த போட்டிகள் நடைபெற்றன.

முதல்போட்டியில் திருச்சி டைகர்ஸ், சென்னை சிங்கம்ஸ்’ அணியினர் மோதினர். இந்த போட்டியினை
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ‘டாஸ்’ போட்டு துவக்கி வைத்தார்.
டாஸில் வென்ற ‘சென்னை சிங்கம்ஸ்’ அணியினர் பீல்டிங்கைத் தேர்வு செய்தனர். முதலில் பேட் செய்த திருச்சி டைகர்ஸ் அணியினர் 62 ரன்கள் எடுத்தனர். அவர்களை அடுத்து களம் இறங்கிய’சென்னை சிங்கம்ஸ்’ அணியினர் 63 ரன்கள் எடுத்து 5விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றனர்.

IMG_8929இரண்டாவது போட்டியில் ‘கோவைகிங்ஸ்’ , ‘ராம்நாடு ரைனோஸ்’ அணிகள் மோதின. டாஸ் வென்ற கோவைகிங்ஸ் பீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய
‘ராம்நாடு ரைனோஸ்’ அணியினர் 71ரன்கள் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய ‘கோவை கிங்ஸ்’ அணியினர் 60ரன்கள் மட்டுமே எடுத்தனர். ராம்நாடு ரைனோஸ் அணியினர் 11ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றனர்.

மூன்றாவது போட்டியில் மதுரை காளைஸ், சேலம் சீட்டாஸ் அணியினர் மோதினர். டாஸ் வென்ற ‘மதுரை காளைஸ்’ அணியினர் பேட்டிங்கைத் தேர்வு செய்தனர். 2விக்கெட் இழப்பிற்கு 59ரன்கள் எடுத்தனர். சேலம் சீட்டாஸ் அணிக்கு வெற்றி இலக்காக 60ரன்கள் நிர்ணயம் செய்யப்பட்டது. பின்னர் களமிறங்கிய ‘சேலம் சீட்டாஸ்’60 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர்.

நான்காவது போட்டியில் ‘நெல்லை டிராகன்ஸ்’, ‘தஞ்சை வாரியர்ஸ்’ அணியினர் மோதினர். டாஸ் வென்று முதலில் களமிறங்கிய நெல்லை டிராகன்ஸ் அணியினர் ஒரு விக்கெட் இழப்பிற்கு 51ரன்கள் எடுத்தனர். அடுத்ததாக களமிறங்கிய தஞ்சை வாரியர்ஸ் ஒரு விக்கெட் இழப்பிற்கு 52ரன்கள் எடுத்து 5விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றிபெற்றனர்.

IMG_4351முதல் சுற்றாக நடந்த நான்கு போட்டிகளில் ‘சென்னைசிங்கம்ஸ்’ அணியினர் ‘திருச்சி டைகர்ஸ்’ அணியினை வென்றனர்.

‘ராம்நாடு ரைனோஸ்’ அணியினர் ‘கோவைகிங்ஸ்’ அணியினரை வென்றனர்.

‘சேலம் சீட்டாஸ்’அணியினர் ‘மதுரை காளைஸ்’ அணியினரை வென்றனர்.

‘தஞ்சை வாரியர்ஸ்’
அணியினர் ‘நெல்லை டிராகன்ஸ்’ அணியினரை வென்றனர்.

அரையிறுதிப் போட்டியில் ‘ராம்நாடு ரைனோஸ்’,  ‘தஞ்சை வாரியர்ஸ்’  ‘சென்னை சிங்கம்ஸ்’ ,  ‘சேலம் சீட்டாஸ்’ அணிகள் மோதின.

முதல் அரையிறுதிப் போட்டியில் ‘சென்னை சிங்கம்ஸ்’
‘,’சேலம் சீட்டாஸ்’ அணியினர் மோதினர். டாஸ் வென்ற சேலம் சீட்டாஸ் அணியினர் பீல்டிங்கைத் தேர்வு செய்தனர்.
முதலில் பேட் செய்த ‘சென்னை சிங்கம்ஸ்’
அணியினர் 2 விக்கெட் இழப்பிற்கு 78ரன்கள் எடுத்தனர். அடுத்ததாக களமிறங்கிய சேலம் சீட்டாஸ் அணியினர் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 70ரன்கள் மட்டுமே எடுத்தனர்.  வெற்றிபெற்றனர். சென்னை சிங்கம்ஸ் அணியினர் 8ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தனர்.

IMG_9030இரண்டாவதுஅரையிறுதிப் போட்டியில் ‘ராம்நாடு ரைனோஸ் ‘, ‘தஞ்சை வாரியர்ஸ்’ அணியினர் மோதினர். டாஸ் வென்ற ‘தஞ்சை வாரியர்ஸ்’
அணியினர் பீல்டிங்கைத் தேர்வு செய்தனர்.
முதலில் பேட் செய்த ‘ராம்நாடு ரைனோஸ்’
அணியினர் 2 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்தனர். அடுத்ததாக களமிறங்கிய தஞ்சை வாரியர்ஸ்’
அணியினர் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தனர்.
இறுதிப்போட்டியில் ‘தஞ்சை வாரியர்ஸ்’ அணி ‘சென்னை சிங்கம்ஸ்’ அணியினருடன் மோதினர்.

நடிகர்கள் விக்ரம்,விஷால்,கார்த்தி, மம்மூட்டி, வெங்கடேஷ், சுதீப் அனைவரும் பாரம்பரிய இசை வாத்தியக் கலைஞர்களுடன் இணைந்து வாத்தியக் கருவிகளை வாசித்து ரசிகர்களை மகிழ்வித்தனர்.

நடிகர் விக்ரம்-ன் பிறந்தநாள் விழா சேப்பாக்கம் ஸ்டேடியத்தில்,
நாசர்,விஷால்,பிரபு,விக்ரம்பிரபு,மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டி,தெலுங்கு திரையுலகின்  சூப்பர்ஸ்டார்கள் மோகன் பாபு,பாலகிருஷ்ணா,கன்னட சூப்பர்ஸ்டார் சுதீப்,மற்றும் பல
நடிகர்,நடிகைகளின் முன்னிலையில் கேக் வெட்டி  கொண்டாடப்பட்டது. கேக் வெட்டி முடிந்தபின் நடிகர்
விக்ரம் பேசியதாவது, எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த, உலகம் முழுவதுமுள்ள தமிழர்களுக்கும்,எனது ரசிகர்களுக்கும், எனது மனமார்ந்த நன்றிகள்.  நான் ரசிக்கும் நடிகர்களுக்கு ரசிகனாகத் தான்,நான் இங்கே வந்திருக்கிறேன். இப்படி ஒரு சர்ப்ரைஸ் கொடுத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. இவ்வாறு அவர் பேசினார்.

இறுதிப்போட்டியில் ‘சென்னை சிங்கம்ஸ்’ அணி டாஸ் வென்று பீல்டிங்கைத் தேர்வு செய்தது.6ஓவர்களின் முடிவில் தஞ்சை வாரியர்ஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து களமிறங்கிய சென்னைசிங்கம்ஸ் அணியினர் 2 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர்.

‘லிப்ரா’ நட்சத்திர கிரிக்கெட் போட்டியின் வெற்றிக் கோப்பையை சூர்யா தலைமையிலான ‘சென்னை சிங்கம்ஸ்’ அணியினர்தட்டிச் சென்றனர் .
.

IMG_9074நிகழ்ச்சியின் முடிவில்
நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் விஷால் நன்றி தெரிவித்துப் பேசுகையில்,
”நாங்கள் இந்த நிகழ்ச்சியை துவங்கும் பொழுது நிறைய கேள்விகளை எதிர்கொண்டோம். அதையெல்லாம் மீறி இன்று இந்தப் போட்டியை வெற்றிகரமாக நடத்தியுள்ளோம். அதற்கு நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். முக்கியமாக நடிகர் ரமணா வின் யோசனை தான் இந்தப் போட்டிக்கான தொடக்கம். அதற்காக அவருக்கு எங்கள் அனைவரது சார்பாகவும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சார்,உலக நாயகன் கமலஹாசன் சார், விக்ரம் சார்,மம்முட்டி சார்,பாலகிருஷ்ணா சார்,வெங்கடேஷ் சார், சுதீப் சார், சிவராஜ்குமார் சார்,திரையுலகின் மூத்த நட்சத்திரங்கள்,மற்றும் எட்டு அணிகளின் கேப்டன்கள்,ஸ்பான்சர்கள்,
அனைத்து PRO க்கள், புரொடக்‌ஷன் மேனேஜர்கள், FEFSI,
ஐசரி கணேஷ் சார், டான்சர்ஸ்,பாரம்பரிய இசைக்கலைஞர்கள், சென்னை கார்ப்பரேஷன்,காவல்துறை, எல்லாவற்றிற்கும் மேலாக  ரசிகர்கள்,இவர்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள். சன் டிவி நிறுவனத்திற்கு எங்களது நன்றி.

உங்கள் அனைவரது ஆசிகளுடன் நடிகர் சங்க கட்டடத்தினை சிறப்பாகக் கட்டுவோம் என உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.” என்றார்.