வாழ்வா சாவா என்கிற நிலையில் என்னை தூக்கி விட்டவர் எஸ்.ஜே. சூர்யா :விஜய் நெகிழ்ச்சி

 

isai23வாழ்வா சாவா என்கிற நிலையில் என்னை தூக்கி  விட்டவர் எஸ்.ஜே. சூர்யா  என்று ‘இசை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசினார்.
இயக்குநராகவும் நடிகராகவும் வெற்றி பெற்ற எஸ்.ஜே.சூர்யா இப்போது இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். அவர் நடித்து இயக்கி இசையமைக்கும் படம் ‘இசை’.இது இசையமைப்பாளர் சம்பந்தப்பட்ட கதையும் கூட.
இதில் எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், சாவித்ரி நடித்துள்ளனர்.எஸ்.எஸ். புரொடக்ஷன்ஸ் சார்பில் சுப்பையா தயாரித்துள்ளார்.
‘இசை’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் விஜய் பேசும் போது
“எனக்கு ‘குஷி’க்கு முன் வாழ்வா சாவா என்கிற நிலை இருந்தது. இந்தப்படமும் ஓடவில்லை என்றால் என்னாகும் என்ற  கேள்வி இருந்தது. அந்த நேரத்தில் ‘குஷி’ என்கிற வெற்றிப்படம் கொடுத்து என்னை தூக்கி விட்டவர் சூர்யாசார். இப்போது அதற்கு நன்றி சொல்கிறேன். ‘குஷி’ ரீலீசானவுடன் விக்ரமன் சார் கேட்டார் எப்படி விஜய் இதை ஏற்றுக் கொண்டு நடித்தீர்கள் கதை என்ன இருக்கு?கதையே இல்லையே? என்றார்.நான் சொன்னேன் சரிதான் ஆனால் எஸ்.ஜே..சூர்யா என்று ஒருத்தர் இருக்கிறார் என்றேன். அவர் கதை சொல்லிக் கேட்க வேண்டும். அப்படி அசத்துவார். நம்மை அப்படியே வசியம் செய்துவிடுவார். ‘நண்பன்’ சமயம் ‘இசை’படத்தின் கதையை என்னிடம் சொன்னார். நன்றாக இருந்தது. அவர் தனித்தன்மையான டைரக்டர். இசையமைப்பாளராகவும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.”என்று மனம் திறந்து பேசி நன்றியுடன் பாராட்டினார்.

நிகழ்ச்சியில் எஸ்,ஜே.சூர்யா பேசும்போது
” ‘வாலி’ யாகட்டும் ‘குஷி’ யாகட்டும் என்படத்தில் கதாநாயகனுக்கு சமமாக கதாநாயகிக்கும் பங்கு இருக்கும். ‘இசை’ யிலும் அப்படித்தான். இதில் சாதாரண கதாநாயகியைத் தேட வில்லை. அந்தக் கதாபாத்திரத்தை எடுத்து நடிக்கும் நடிகையைத்தான் தேடினேன். பல மொழிகளில் 4 மாதம் தேடி 124 பேரில் தேர்வானவர்தான் இந்த சாவித்ரி. இவர்  நடிகையர் திலகம் சாவித்ரியம்மா போல இருந்தார்.சமகால  சாவித்ரி போல  தோன்றினார்.நிச்சயம்அந்த சாவித்ரி போலவே புகழ் பெறுவார்.இன்று ஒரு பிராந்திய மொழியில் 100 கோடிரூபாய் வசூல் செய்யுமளவுக்கு உயர்ந்துள்ள விஜய்சார் இங்கு வந்துள்ளது மகிழ்ச்சி பழக்கமில்லை என்றாலும் விழாவுக்கு கூப்பிட்டதும் தயக்கமில்லாமல் எப்போ என்றார். தனுஷ்சார்.இங்கு வந்துள்ளது மகிழ்ச்சி சத்யராஜ் சார் இல்லை என்றால் இந்தப்படம் முழுப்படமாக வந்திருக்காது. ரஜினிசார், சத்யராஜ்சார், ஷாருக்கான்சார் ஆகியோரிடம் உள்ளுக்குள் இருக்கும் தனித்துவம் வரும்.இதிலும் வந்துள்ளது.

‘இசை’ படத்தில் இசையமைப்பளராக நடிக்க இசைப்பயிற்சி எடுக்க விரும்பினேன். அப்போது ஏஆர்.ரகுமான்சார் ‘நடிப்பது என்ன ஏன் நீங்களே இசையமைக்கக் கூடாது?’ என்று ஊக்கமும் நம்பிக்கையும்  கொடுத்தார்.நான்  இசையமைப்பளராக அவர்தான் காரணம்.” இவ்வாறு எஸ்:ஜே.சூர்யா பேசினார்.

தனுஷ்,இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸ்,  விஷ்ணு வர்தன்,தயாரிப்பாளர் சந்திரப்பிரகாஷ் ஜெயின்,, பாடலாசிரியர் மதன் கார்க்கி ஆகியோரும் பேசினார்கள்.