
“அரசியல் மட்டுமில்லாமல், அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கக்கூடிய சிறந்த ஒரு பொழுது போக்கு திரைப்படமாகவும் எங்களின் ‘சகாவு’ உருவாகி இருக்கின்றது. படம் வெளியான நாள் முதல் இன்று வரை ரசிகர்களிடம் சகாவு, பெரும் வரவேற்பைப் பெற்று வருவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது. சகாவு வெளியான திரையரங்குகளில் எல்லாம் ‘ஹவுஸ் புல்’ காட்சிகள் தான். அது மட்டுமின்றி, ரசிகர்களின் எண்ணிக்கையை சரி செய்ய, திரையரங்குகளில் கூடுதலாக காட்சிகள் திரையிடப்பட்டு வருகிறது என்பதையும் நான் நன்கு அறிவேன்” என்று கூறுகிறார் நிவின் பாலி.

நடிகர் – இயக்குநர் வினீத் ஸ்ரீனிவாசன் தன்னுடைய சமுக வலைத்தள பக்கத்தில் கூறியதாவது: ” நான் இயக்கிய நான்கு படங்களுள் மூன்று படங்களில் நிவின் பாலி நடித்திருக்கிறார். அப்போதெல்லாம் நான் நிவின் பாலியை கதாபாத்திரமாக இல்லாமல் ஒரு மனிதனாக தான் பார்த்து இருக்கின்றேன். ஆனால் சகாவு படத்தில் அவர் நடித்து இருக்கும் தோழர் கிருஷ்ண குமார் கதாபாத்திரம் மிகவும் வலுவானது. ஒரு சக மனிதனாக இல்லாமல் அந்த தோழர் கதாபாத்திரமாக தான் நிவின் பாலியை பார்க்கின்றேன்”
பிரபல இயக்குநர் ரஞ்சித் சங்கர் கூறியதாவது: “இதுவரை எந்த நடிகரும் ‘சகாவு’ படத்தின் நிவின் பாலி போல் என்னை கவர்ந்தது இல்லை. தைரியமாக இந்த கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறார் நிவின் பாலி”
‘யுனிவர்சல் சினிமா’ சார்பில் பி ராஜேஷ் தயாரித்து இருக்கும் ‘சகாவு’ படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், அபர்ணா கோபிநாத், காயத்ரி சுரேஷ் மற்றும் ஸ்ரீனிவாசன் ஆகியோர் நடித்துள்ளனர். ஜார்ஜ் C வில்லியம்ஸ் ஒளிப்பதிவாளராகவும், பிரஷாந்த் பிள்ளை இசையமைப்பாளராகவும் பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.