அஜீத்தின் ‘‘என்னை அறிந்தால்’’ படத்தின் டீசர் கடந்த வியாழக்கிழமை அன்று வெளியானது. இந்த டீசர் வெளியான 48மணி நேரத்துக்குள் 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இந்த டீசரை கண்டு ரசித்துள்ளனர்.அது இப்போது 25 லட்சத்தைத் தாண்டிவிட்டது.
இந்த டீசரில் அஜீத் இரு கெட்டப்பில் தோன்றுகிறார். ஒரு கெட்டப்பில் வாட்டசாட்டமான இளைஞனாக சிரித்த முகத்துடன் வருகிறார். இன்னொரு கெட்டப்பில் லேசான தாடியுடனும், கையில் துப்பாக்கியுடனும் ஆவேச முகம் காட்டுகிறார். துப்பாக்கியால் யாரையோ குறி வைக்கவும் செய்கிறார். கதையை புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு டீசர் உள்ளது என்று ரசிகர்கள் தெரிவித்தனர். அஜீத் கெட்டப் பிரமாதமாக உள்ளது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
அந்த டீசரில்… ஒரு மெல்லிசான கோடு… கோட்டுக்கு இந்த பக்கம் இருந்தா நான் நல்லவன்.. அந்தப் பக்கம் போய்ட்டா நான் ரொம்ப கெட்டவன்… இந்த பக்கமா, அந்த பக்கமான்னு முடிவு பண்ண வேண்டிய நேரம் வந்துச்சு, வாழ்க்கைல ஒருநாள்… என்னை அறிந்தால்… என்று அஜீத் பேசும் பஞ்ச் வசனமும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
நேற்று (6-12-2014) இரவு சுமார் 8 மணி நிலவரப்படி, ‘‘என்னை அறிந்தால்’’ படத்தின் டீசரை சுமார் 22 லட்சத்து 75 ஆயிரம் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.
இன்று (7-12-2014) காலை சுமார் 7 மணி நிலவரப்படி, இதை சுமார் 25லட்சத்து 48ஆயிரம் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.
அஜீத்தின் ‘‘என்னை அறிந்தால்’’ படத்தின் டீசர் கடந்த வியாழக்கிழமை அன்று வெளியானது. இந்த டீசர் வெளியான 48 மணி நேரத்துக்குள் 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இந்த டீசரை கண்டு ரசித்துள்ளனர்.
சூப்பர் ஸ்டார் நடித்த ‘லிங்கா’ படத்தின் டிரைலர் வெளியாகி 34 நாட்கள் ஆயிற்று. ஆனால் லிங்கா டிரைலருக்கு கிடைத்த லைக்ஸ்களின் எண்ணிக்கை 19,378.
மேலும் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் ஷங்கரின் பிரமாண்ட படமான ‘ஐ’ படத்தின் டீஸர் வெளியாகி 81 நாட்கள் ஆகிறது. இந்த டீஸருக்கு கிடைத்த லைக்குகளின் எண்ணிக்கை 41,038.
விஜய்யின் கத்தி படத்தின் டீஸர் வெளியாகி 77 நாட்கள் ஆகியுள்ளது. இந்த படத்தின் டீஸருக்கு கிடைத்த லைக்குகளின் எண்ணிக்கை 32,109. ஆனால் அஜித்தின் என்னை அறிந்தால் டீஸர் வெளியாகி 24 மணிநேரம் முடிவதற்கு முன்பே 33,100 லைக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இபோதைய நிலவரம் 60826 லைக்குகள்,என்று அஜீத்தின் ரசிகர்கள் முகநூலில் ஆர்ப்பரிக்கிறார்கள்.