
‘சதுரங்க வேட்டை’ படத்தில் நட்டிக்கு ஜோடியாக நடித்தவர் இஷாரா நாயர். இவர் நடித்த பானு என்கின்ற வெகுளி கதாபாத்திரம் மூலமாக ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை அடித்து சென்ற இஷாரா நாயர், தற்போது ‘அதி மேதாவிகள்’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் ரஞ்சித் மணிகண்டன் இயக்கி, ‘அப்சலூட் பிச்சர்ஸ்’ சார்பில் மால்காம் தயாரித்து இருக்கும் இந்த ‘அதி மேதாவிகள்’ திரைப்படத்தில், பிரபல தொகுப்பாளர் சுரேஷ் ரவி (மோ படப் புகழ்) கதாநாயகனாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்காக என்னை உடல் எடையை குறைக்க சொன்னார் இயக்குநர் ரஞ்சித்
மணிகண்டன். அதற்கு அவர் கொடுத்த கால அவகாசம் வெறும் 10 நாட்கள் தான். இருந்தாலும் இதை நான் சவாலாக எடுத்து கொண்டு, 10 நாட்களில் உடல் எடையைக் குறைத்தேன். மற்ற எல்லாப் படங்களில் இருந்தும் எங்களின் அதி மேதாவிகள் படம் தனித்து விளங்கும். காதல் இல்லாமல் வெறும் நட்பை மட்டுமே எங்கள் அதி மேதாவிகள் படம் உள்ளடக்கி இருப்பதே அதற்குக்
காரணம். படத்தின் வெளியீட்டிற்காக ஆவலோடு காத்து கொண்டிருக்கின்றேன்” என்று உற்சாகமாக கூறுகிறார் அதி மேதாவிகள் படத்தின் கதாநாயகி இஷாரா நாயர்.

