பார்வதி நாயர் தனது கனவுகளின் வழியே சினிமாவை அடைந்தவர். மாடலிங், ஓவியம் என ஆர்வம் உடையவர். நடிப்புத் துறையிலும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு வருகிறார். தமிழில் தனது முதல் படமான ‘என்னை அறிந்தால்‘ பற்றி ஆர்வத்துடன் கூறுகிறார்.
அபுதாபியில் மலையாள குடும்பத்தில் பிறந்த இவரது தந்தை பொறியாளர், தாய் கல்லூரி ஆசிரியர். படிப்பில் இருந்த ஆர்வத்தினால் எஞ்ஜினீயரிங் பயின்றார். ஒரு மாடலுக்கான அனைத்து அம்சங்களையும் பெற்றிருந்த பார்வதி பல விளம்பரப் படங்களில் நடித்து வந்தார். பின்னர் கன்னடம் மலையாளம் படங்களில் நடித்தார். பல படங்களில் நடித்து வந்தாலும் ஓவியம் தீட்டுவதை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். பள்ளிபருவத்தில் உலகின் மிக நீளமான ஓவியம் தீட்டும் குழுவில் இடம் பெற்று கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் பெற்றுள்ளார்.
‘என்னை அறிந்தால்’ பட வாய்ப்பை பற்றி கூறும் பொழுது “ காலம் என்னை கனிவாய் வழி நடத்தி வந்துள்ளது. எனது முதல் தமிழ் படமே அஜித் சார் மற்றும் கௌதம் சார் உடன் அமைத்திருக்கிறது. கௌதம் சார் இப்படத்திற்கு அழைக்கும் முன் வரை தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்பது ஒரு நீண்ட நாள் ஆசையாகவே இருந்து வந்தது.
“ அஜித் சார் அனைவரிடமும் மிக அன்பாக நடந்து கொள்வார். அஜித் சார் நகைச்சுவை உணர்வு கொண்டவர். அவருடன் நடித்தது ஒரு கனவாய் இருந்தது. கௌதம் சார், நான் பணிபுரிந்த இயக்குநர்களில் பழகுவதற்கு மிக இலகுவானவர். அவர் இருக்கும் பொழுது படபிடிப்பு தளமே மிக பரப்பாக இருக்கும். என்னை அறிந்தால் குழுவினர்க்கும், தயாரிப்பாளர் AM ரத்னம் அவர்களுக்கும் நன்றி கூறியே ஆக வேண்டும்.
“எவ்வளவு பெரிய நிலைகளுக்கு சென்றாலும், உச்சத்தில் நின்றாலும் அட்க்கத்துடன் இருக்க வேண்டும். இப்படி என்னை அறிந்தால் படத்தின் மூலம் பல விஷயங்கள் கற்றுகொண்டேன்.”, என்று கூறினார் பார்வதி நாயர்.