ஒருவன் எப்படி குடியின் பிடியில் விழுகிறான். மெல்ல மெல்ல அந்தக்குடியின் கோரமான கரத்தில் சிக்கி எப்படி சின்னா பின்னாமாகிறான் விரும்பினாலும் திரும்பமுடியாத குகைப்பயணமாக அது எப்படி அவனை திசைமாற்றுகிறது என்பதே ‘அப்பா வேணாம்ப்பா’படத்தின் முன் கதை.
திருந்த நினைத்து அவன் எதிர்கொள்ளும் போராட்டங்கள் தீர்வு என்ன என்பதே முடிவு.
முதல் பாதியில் சேகர் என்கிற நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஒருவனிடம் குடிப் பழக்கம் விளையாட்டாக வருகிறது. பழக்கம் வழக்கமாகிறது. அவனை குடி நோயாளியாக மாற்றுகிறது குடும்பம் மனைவி குழந்தைகள் வருந்து கின்றனர். ஒரு கட்டத்தில் வெறுக்கின்றனர் என்பது முதல்பாதி
அவனுக்கு ஏஏ அமைப்பு அடைக்கலம் கொடுத்து எப்படி அவனை குடிநோயி லிருந்தும் மனநோயிலிருந்தும் மீட்கிறது என்பதே மறுபாதி.
நம் தமிழ்நாட்டில் பொழுதுபோக்கா£க எத்தனையோ படங்கள் வருகின்றன. அத்தனை படங்களிலும் எங்காவது குடிக்கும் காட்சிகள் வருகின்றன.
ஆனால் பழுதுநீக்கும் விதமாக வந்துள்ள படம்தான் ‘அப்பா வேணாம்ப்பா’.
ஆல்கஹாலிக் அனானிமஸ் பற்றியும் குடி அடிமை குடிநோயாளிகள் பற்றி சலகலப்பான கருத்துள்ள படமாக வந்துள்ளது. நியாயமாக இதை மது அடிமைகளான ‘குடி’ மகன்கள் மட்டுமல்ல ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் பார்க்கவேண்டும்.
இதை வெறும் பிரச்சார தொனியில் சொல்லாமல் உளவியல் பார்வையில் கலகலப்பு குறையாமல் சொல்லி இருக்கிறார்கள்.
இயக்கி நாயகனாக நடித்துள்ள வெங்கட் ரமணன் பாராட்டுக்குரியவர். இது போன்ற படங்களுக்கு வரிவிலக்கு கொடுத்தால் மட்டுமே அந்த வரி விலக்கிற்கே மரியாதை.
குறைந்த செலவில் எடுக்கப்பட்டு இருக்கலாம். பெரிய நட்சத்திரங்கள் நடிக்காமல் இருக்கலாம் ஆனால் இயக்குநருக்கு திரைமொழி தெரிந்து இருக்கிறது. எனவே எல்லா அலங்கார ஆடம்பர போதாமைகளையும் யதார்த்தமான காட்சிகள் மூலம்ஈடுசெய்து சமன் இருக்கிறார்.
கத்தி லிங்கா படங்களுடன் ஒப்பிட்டால் கூட சமூகத்துக்கு நன்மை செய்யும் நோக்கில் இது உயர்ந்த படம் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.