மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘அமரன்’ திரைப்படம் அண்மையில் வெளியாகி வெற்றி பெற்றது. அந்தப் படத்தில்
தங்கள் முன்னாள் மாணவரான மேஜர் முகுந்த் பாத்திரத்தில் நடித்து பெருமைப்படுத்தியதற்காக ‘அமரன்’ திரைப்படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயனுக்கு,
ராணுவத்தினருக்குப் பயிற்சி தரும் நிறுவனமான ஆபிஸர்ஸ் ட்ரெய்னிங் அகாடமி (The Officers Training Academy) சார்பில் ஒரு பாராட்டு விழா நடந்தது.விழாவில் அகாடமி சார்பில் சிவகார்த்திகேயன் நினைவுப் பரிசு வழங்கப்பட்டு பாராட்டப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார்.