தேசியவிருது பெற்ற தனுஷ் தமிழ் மொழி தாண்டி தன் எல்லையை விரிவுபடுத்தி வருகிறார். தனுஷ் நடிக்கும் இரண்டாவது இந்திப்படம் ‘ஷமிதாப்’.இதில் தனுஷ் அமிதாப் பச்சனுடன் நடிக்கிறார்
கமலின் மூத்தமகள் ஸ்ருதிஹாசனுடன் ‘3’ படத்தில் நடித்த தனுஷ், ‘ஷமிதாப்’பில் இளையமகள் அக்ஷரா ஹாசனுடன் நடிக்கிறார். அக்ஷரா இதில்தான் அறிமுகமாகிறார்.
‘சீனிகம்’ ,’பா’ படங்களை அமிதாப்பை வைத்து இயக்கிய இயக்குநர்ஆர். பால்கிதான் ‘ஷமிதாப்’.பை இயக்கியுள்ளார். பால்கி ஒரு தமிழர் என்பது குறிப்பிடத் தக்கது. நம்மூர் இளையராஜா இசையமைத் துள்ளார்; பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
‘ஷமிதாப்’ படத்தின் அறிமுகவிழா நேற்று மாலை சத்யபாமா பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு வருவதாக இருந்த அமிதாப் பச்சன் தவிர்க்க இயலாத காரணங்களால் வரவில்லை.
நிகழ்ச்சியில் சத்யபாமா பல்கலைக் கழக நிறுவனர் ஜேப்பியார் பேசும் போது ” தமிழ்நாட்டில் பிரபலமடைந்த தனுஷ் திடீரென்று பாலிவுட் சென்று இந்திப் படங்களில் நடிப்பது மகிழ்ச்சி. அவருக்கு என் பாராட்டு. நம் மண்ணில் பிறந்து புகழ்பெற்ற தமிழின் கௌரவமாக இருக்கும் கமல்ஹாசனின் மகள் அக்ஷரா எடுத்த எடுப்பிலேயே இப்படத்தில் பெரிய கேரக்டரில் நடிப்பது மகிழ்ச்சி
முந்தைய படங்களின் மூலம் பெரிய அளவில் பாராட்டு பெற்றவர் இயக்குநர் பால்கி.அவருக்கு என் வாழ்த்து.
தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற இளையராஜா இந்தியில் இசையமைக்கிறார். இதன் மூலம் உலகம் போற்றும் அளவுக்கு புகழ் பெறுவார். ” என்றார்.
தனுஷ் பேசும் போது.. “இந்தியில் முதல் படம் முடித்த போது அடுத்து என்ன படம் என்று கேள்வி வந்தது. எதைச் செய்வது என்ற புரியவில்லை. நல்ல கதைக்காக பல மாதங்கள் காத்திருந்தேன். பால்கி போன் செய்தார். அப்படி பால்கி சார் சொன்ன கதை பிடித்திருந்தது. இதற்காகக் காத்திருந்தது கவறில்லை என்று தோன்றியது. அமிதாப் சாருடன் நடிப்பது பெருமை.முதலில் அவர் நல்ல மனிதர். அவருடன் நடிக்கும் போது கற்றுக்கொள்ள வேண்டும் என்றுதான் நடிக்கவே ஆசைப்பட்டேன். நிறைய கற்றுக் கொண்டேன். அவர் ஒரு ஜாம்பவான். ஏற்கெனவே அவரைச் சந்தித்திருக்கிறேன். ஒரு விருதுவிழாவில் மேடை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது சந்தித்தேன். இந்தப் படத்தில் என்ன ஹோம் ஒர்க் செய்தீர்கள்,என்ன கஷ்டங்களைச் சந்தித்தீர்கள் என்றெல்லாம் கேட்கிறார்கள். வீட்டில் சிந்தித்து நடிக்கிற அளவுக்கு ஹோம் ஒர்க் செய்கிற அளவுக்கு எனக்கு அறிவு கிடையாது. காலியான மூளையுடன்தான் படப்பிடிப்புக்குச் செல்வேன். அதில் வேண்டியதை இயக்குநர் நிரப்புவார். நான் வெளிப்படுத்துவேன். இதுதான் நடந்தது.உடன் நடித்த யாரும் என்னை சிரமப்படுத்த வில்லை. ”என்றார்.
இயக்குநர் பால்கி பேசும் போது.. “எல்லாரும் என்னிடம் கேட்கிற கேள்வி ஷமிதாப் யார்? இந்தப் படத்தில் தனுஷ் ஏன்..? என்பதுதான். ஷமிதாப் என்பது தனுஷா? அமிதாப்பா? என்பதுதான்.என்னைக் கேட்டால் அவர் களுக்கும் அப்பால்.. வேறு ஒரு விஷயம் இருக்கிறது என்பேன் .தனுஷ் திறமையான புத்திசாலியான நடிகர். அவரைப் பயன்படுத்தியிருப்பது சரியென்று படம் பார்க்கும் போது புரியும்.
படத்தில் தனுஷ் அக்ஷரா இடையில் ஹெமிஸ்ட்ரி இருந்தது.ஆனால் அமிதாப். தனுஷ் இடையில் பிஸிக்ஸ் இருந்தது என்று கூறுவேன்.
இசை என்றால் இளையராஜாதான். எனவே அவரை இசையமைக்கச் வைத்தோம் ” என்றவரிடம் தமிழில் படம்இயக்குவீர்களா என்ற போது. ”தமிழில் இயக்க கதையும்ஏற்ற நடிகரும்அமைந்தால் பார்க்கலாம் ”என்றார்.
அக்ஷரா பேசும் போது. ” படப்பிடிப்பு அனுபவம் முதலில் எனக்குப் பயம் .பதற்றமாக இருந்தது. இவ்வளவு பெரிய யூனிட்.. இவ்வளவு பெரிய ப்ராஜக்ட் என்று..கைகால் உதறியது இப்படத்தில் நடித்தது மறக்க முடியாது “என்றார்.
இளையராஜாவின் ‘ஆசைய காத்துல தூதுவிட்டேன்’ ‘ஜானி’ படத்தின்
பாடல் மெட்டில் இப்படத்தில் இந்தியில் பாடல் இடம் பெற்றுள்ளது.
‘ஷமிதாப்’. படத்தை ஹோப் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. அமிதாப், தனுஷ், பால்கி ஆகியோரின் நிறுவனங்களும் தயாரிப்பில் இணைந்துள்ளன. ஈராஸ் நிறுவனம் படத்தை வெளியிடுகிறது. பிப்ரவரி.6ல் படம் வெளியாகிறது.