இயக்குநர் ஃபெரோஸ் – நடிகை விஜயலட்சுமி திருமணம்!

vijayalaxmi-mgeஇயக்குநர் ஃபெரோஸ் – நடிகை விஜயலட்சுமி திருமணம் இன்று நடைபெற்றது !

 

இயக்குநர் அகத்தியனின் மகளும் பிரபல நடிகையுமான விஜயலட்சுமிக்கும் இயக்குநர் ஃபெரோஸ்க்கும் இன்று காலை சென்னை மந்தைவெளியில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் கல்யாண மண்டபத்தில் திருமணம் இனிதே நடைபெற்றது.

 

இயக்குநர் ஃபெரோஸ், கௌரவ் இயக்கிய தூங்காநகரம் படத்திலும், அறிவழகன் இயக்கிய வல்லினம் படத்திலும் துணை இயக்குநராக பணியாற்றியவர். தற்போது நடிகர் கிருஷ்ணா நடிப்பில் “பண்டிகை” என்ற படத்தை இயக்கி வருகிறார்.

 

மணமகன் – ஃபெரோஸ் (Feroz)

தந்தை பெயர் – நைனா முகமது

தாயார் பெயர் – சுலேகா

 

மணமகள் – விஜயலட்சுமி

தந்தை பெயர் – அகத்தியன்

தாயார் பெயர் – ராதா அகத்தியன்