இந்த அறக்கட்டளையை இசைஞானி இளையராஜா தொடங்கிவைத்தார். இவ்விழாவில் திரு.T.V.கோபாலகிருஷ்ணன், திரு. நல்லி குப்புசாமி செட்டி ,திருமதி. சுதா ரகுநாதன் , திரு.உன்னி கிருஷ்ணன் மற்றும் cleaveland சுந்தரம் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
இவ்விழாவில் திரு.நல்லி குப்புசாமி செட்டி அவர்கள் பேசுகையில்,” பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் ஒரு இசை மாமேதை. ஒரு முறை நான் அவரிடம் , உங்கள் இசை கச்சேரிகளில் வாசிக்கும் கலைஞர்கள் எல்லாம் பதற்றமாக இருக்கையில், நீங்கள் மட்டும் எப்படி இப்படி பதற்றமே இல்லாமல் அமைதியாக இருக்கிறீர்கள் என கேட்டேன். அதற்கு அவர், ” இசை சுரங்கள் மட்டும் தன் பதற்றமாக இருக்கவேண்டுமே ஒழிய , அதை மீட்டும் விரல்கள் பதற்றமாகக்கூடாது ” என புன்னகையுடன் கூறினார்.


இந்த அறக்கட்டளையை தொடங்கிவைத்ததில் எனக்கு மாபெரும் பெருமை. மற்ற எல்லா இசை வடிவங்களை விட கர்நாடக சங்கீதமே மேலானது என நம்புகிறேன். கடவுள் நம்மிடமிருந்து பாலமுரளி அவர்களை சீக்கிரமே எடுத்துக்கொண்டாலும் , அவரது புகழும் சாதனைகளும் காலத்தால் அழிக்க முதியாதவை ஆகும் ”
இந்நிகழ்ச்சியில் ஆந்திர பிரதேச மாநில அரசு, பாலமுரளி கிருஷ்ணா அறக்கட்டளை மூலம் இசை மாணவர்கள் பயன் பெற ஆண்டுதோறும் ஒரு லட்சம் ருபாய் தருவதாகவும் , அவர்களின் அரசு இசைக் கல்லூரியை ‘பாலமுரளி கிருஷ்ணா இசை கல்லூரி ‘ என பெயர் மாற்றப்போவதாகவும் , அவரது பிறந்தநாளை ஆந்திர பிரதேசத்தின் இசை நாளாக கொண்டாடப்போவதாகவும் அறிவித்தனர்.
இ

இந்த அறக்கட்டளையின் அறங்காவலர்கள் திரு.மங்கலம்பள்ளி அபிராம் , டாக்டர். மங்கலம்பள்ளி சுதாகர், டாக்டர் .வம்சி மோகன் , டாக்டர்.கே.கிருஷ்ணகுமார் மற்றும் திரு,விபு பாலமுரளி ஆவர் .