
இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துள்ள நிலையில், அடுத்து உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயன்ட் மூவீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், என்றென்றும் புன்னகை அகமது இயக்கும் புதிய படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இதனுடன், “ஈரம்” அறிவழகன் இயக்கத்தில் அருள்நிதியின் ஜோடியாக “ஆறாது சினம்” படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் இரண்டு புதிய படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக உற்சாகமுடன் கூறும் ஐஸ்வர்யா ராஜேஷ், கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதை தனது கொள்கை என்றும் கூறுகிறார்.