சினிமா கஷ்டத்தில் இருக்கிறது. நஷ்டத்தில் என்றுதான் பல ஆண்டுகளாகப் பேசி வருகிறார்கள். ஒரு படம் ஓடுகிறது. லாபம் வந்தது. வெற்றி பெற்று இருக்கிறது என்கிற வார்த்தையை பேச்சை அடிக்கடி கேள்விப்பட முடிவதில்லை. எப்போதாவதுதான் கேட்க முடிகிறது.
அதுவும் சிறிய பட்ஜெட்டில் முற்றிலும் புதிய வர்களைக் கொண்ட குழுவினர் வெற்றி என்பது மிகமிக அரிதாகவே சாத்தியப் படுகிறது. படம் நன்றாகவே இருந்தாலும் கூட பெரிய படங்களின் வெட்டி விளம்பர ஆடம்பர ஆரவாரங்களி டையே காணாமல் போய்விடுகிறது. நட்சத்திர பலமின்றி விளம்பர ஆடம்பரமின்றி மீடியாக்களின் வரவேற்பால் மட்டுமே நற்பெயர் பெற்று ஒரு படம் வெற்றி பெற்றிருக்கிறது. அதுதான் ‘ஆ’ .
கேடிவிஆர் கிரியேடிவ் ப்ரேம்ஸ் தயாரிப்பில் வெளியான ‘ஆ’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. ‘ஜிகர்தண்டா ‘ வில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த பாபி சிம்ஹா ‘ ஆ ‘ திரைப் படத்திலும் வித்தியாசமான வில்லன் வேடத்தில் தோன்றி ரசிகர்களை கவர்கிறார்.பல்வேறு கலைகளில் தேர்ச்சி பெற்றவர் என எல்லோராலும் பாராட்டப் பட்ட கோகுல்நாத் ரசிகர்களிடையே தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். இயக்குநர்கள் ஹரி -ஹரீஷ் கூட்டணி ‘அம்புலி’யைத் தொடர்ந்து மீண்டும் ஒரு வெற்றி தந்துள்ளனர்.
இது ஒரு வித்தியாச திகில்படமாக ‘5 இன்1’ கதைகள் கொண்ட படமாக அமைந்து விமர்சன வரவேற்பைத் தொடர்ந்து ரசிகர்கள் ஆதரவையும் பெற்று வெளியான திரையரங்குகள் அதிகரித்து வசூலும் செய்து வருகிறது.
இந்த மகிழ்ச்சியை தயாரிப்பாளர்கள் லோகநாதன், சீனிவாஸ் இயக்குநர்கள் ஹரி & ஹரீஷ், நடிகர் கோகுல்நாத், நடிகை மேக்னா ஆகியோர் மீடியாக்களிடம் பகிர்ந்து கொண்டனர்.
மகிழ்ச்சியில் நனைந்து அவர்கள் நீளமாக பேசினாலும் அதன் ஒற்றைவரி பிரகடனம் ‘ஊக்கம் தந்த ஊடகங்களுக்கு இப்படம் சமர்ப்பணம். ஆதரவு தந்த ரசிகர்களுக்கு இப்படம் சமர்ப்பணம் ‘ . என்பதுதான்.
உற்சாகம் பீறிட படக்குழு அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகிவிட்டனர்.. ‘ஆ’…ஹா..ஜமாயுங்கள்!