ஒரே நேரத்தில் 7 படங்கள் தொடக்கவிழா ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் நடைபெற்றது. ‘ஜனவரி மழையில்’ ‘லந்து’ ‘கடவுள் இருக்கான் குமாரு’ ‘கொள்ள கூட்டபாஸ்’ ‘கோக்’ ‘வட்டச் செயலாளர் வண்டு முருகன்’, ‘நீங்க புடுங்குற ஆணி எல்லாமே தேவை இல்லாத ஆணிதான்’ என்கிற 7 படங்களின் அறிமுகங்கள் நடந்தன.
பாக்ஸ் அண்ட் க்ரோ நிறுவனத்தின் சார்பில் பல கூட்டாளிகளைச் சேர்த்துக் கொண்டு இம் முயற்சியில்ராஜேஷ் கண்ணன் இறங்கியிருக்கிறார் ..பாக்ஸ் அண்ட் க்ரோ நிறுவனத்துடன் க்யூலாரெட் நிறுவனமும் இணைந்துள்ளது.
இம்முயற்சியில் ஸ்டுடியோ 9 சுரேஷ், மலேசியாவைச் சேர்ந்த ராஜாராகவன், புருஷோத்தமன், கார்த்திக், நளினி முத்தையா, தனபால் போன்றோரும் கை கோர்த்துள்ளனர்.
இம்முயற்சி பற்றி ராஜேஷ் கண்ணன் பேசும்போது.. “எனக்கு சினிமா என்றால் உயிர். ஏதாவது செய்து கொண்டே இருப்பேன். பலதுறைகளிலும் வேலை பார்ப்பேன். சினிமாவுக்கு வந்து 16 ஆண்டுகள் ஆகிவிட்டன. அஜித் எனக்கு நல்ல நண்பர். ஒருநாள் கேட்டார். வாழ்க்கையில் என்ன ப்ளான் வச்சிருக்கே. நான் பல வேலை செய்வதை சொன்னேன். இப்படி பலவற்றில் ஈடுபடுவது சரியாக இருக்காது. ஏதாவது ஒன்றில் கவனம் செலுத்த வேண்டும். அல்லது ஒரு நிறுவனம் ஆரம்பித்து செய்யவேண்டும். அதற்கு முதலில் தேவை விசிட்டிங் கார்டு. என்று தெளிவு படுத்தி தொடங்கி வைத்தார். அதை மறக்க மாட்டேன். நான் பலரிடம் கதை சொல்லி 52 கதைகள் உருவாக்கிவிட்டேன். ஒருகட்டத்தில் சலித்துவிட்டு இம் முயற்சியில் ஈடுபட முடிவு செய்தேன்.
நண்பர்கள் கை கொடுத்தார்கள். என்னைப் பொறுத்தவரை எல்லாமே மேட் இன் ப்ரண்ட்ஷிப் என்றுதான் சொல்வேன்.
ஒரு படம் எடுக்கவே முச்சு முட்டுது நாக்கு தள்ளுது.. காதுல ரத்தம் வருது இந்த லட்சணத்தில் 7 படமா என்கிறார்கள். புதியதை வரவேற்கத் தயாராக இருக்கும் ரசிகர்களை நம்பி இறங்கியிருக்கிறோம் “என்றார்.
நிகழ்ச்சியில் ஸ்டுடியோ 9 சுரேஷ், சுந்தர்,மலேசியாவைச் சேர்ந்த ராஜாராகவன், புருஷோத்தமன், கார்த்திக், நளினி முத்தையா, தனபால்ஆகியோரும் பேசினார்கள் கூட்டணி சேர்ந்துள்வர்கள் சினிமா உறவே இல்லாத தங்களை எவ்வாறு பேசிக் கவர்ந்து ராஜேஷ் கண்ணன் ஈடுபட வைத்தார் என்று கூறினார்கள்
இறுதியாக ஒன்றுராஜேஷ் கண்ணன் திரைத்திறமை இருப்பவரா இல்லையா தெரியாது. பேச்சுத் திறமையுள்ளவர் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.