ஏவி.எம். பட நிறுவனத்தை ஏவி.மெய்யப்பன் செட்டியார் தொடங்கி 70 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிறுவனம் ‘பராசக்தி’, ‘அன்பே வா’, ‘உயர்ந்த மனிதன்’, ‘முரட்டுக்காளை’, ‘சகலகலா வல்லவன்’, ‘சிவாஜி’, ‘அயன்’ உள்பட 176 படங்களை தயாரித்து உள்ளது.
இந்த நிறுவனத்தின் 70-வது ஆண்டு விழாவும், ஏவி.மெய்யப்பன் தமிழில் எழுதிய ‘எனது வாழ்க்கை அனுபவங்கள்’ என்ற புத்தகத்தின் ஆங்கில மொழியாக்க நூல் வெளியீட்டு விழாவும் சென்னை மயிலாப்பூரில் உள்ள ஏவி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடந்தது. விழாவுக்கு இந்து என்.ராம் தலைமை தாங்கினார்.
தொழிலதிபர் கிருஷ்ணராஜ் வானவராயர் முதல் பிரதியை வெளியிட நடிகர் பிரபு பெற்றுக் கொண்டார். எம்.பாலசுப்பிரமணியன் வரவேற்று பேசினார். அபர்ணா குகன் நன்றி கூறினார். விழாவில் ஏவி.எம்.சரவணன், இயக்குநர்ர்கள் எஸ்.பி.முத்துராமன், வி.சி.குகநாதன், பேரரசு, தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.தாணு, செயலாளர் டி.சிவா மற்றும் அவ்வை நடராஜன், கவிஞர் முத்துலிங்கம், டி.ஜி.தியாகராஜன், சிவாஜி பிலிம்ஸ் ராம்குமார், எடிட்டர் மோகன், பிலிம் நியூஸ் ஆனந்தன், தனஞ்செயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.