கார்த்திகேயன் பெருமையுடன் வழங்க மேக் 5 ஸ்டுடியோஸ் என்ற பட நிறுவனம் அதிகப் பொருட்செலவில் தயாரிக்கும் படம் ‘ விளையாட்டு ஆரம்பம்’.
இந்தப் படத்தில் யுவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஸ்ராவியா நடிக்கிறார். மற்றும் ரியாஸ்கான், பவர்ஸ்டார் சீனிவாசன், பானுசந்தர், விஜய்ஆனந்த், எலிசபெத் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு அனுஜா நடிக்கிறார்.
இந்தப் படத்தின் கதையை பெரோஸ்கான் எழுதி இருக்கிறார்.
தயாரிப்பு – ஆனந்த் உதார்கர், கார்த்திகேயன்.
திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்கள் விஜய் ஆர். ஆனந்த், ஏ.ஆர்.சூரியன் இருவரும்.
படம் பற்றி இயக்குநர்கள் கூறியதாவது…
” இன்று ஐ.டி.கம்பெனிகளில் வேலை செய்பவர்களைப் பற்றிய பதிவு தான் இந்தப் படம்…
ஆரம்பத்தில் ஒரு லட்சம் இரண்டு லட்சம் என்று சம்பளம் கைக்கு வரும் போது சந்தோஷம் தலை விரித்தாடும்..இது நிரந்தரம் என்று நினைத்து விடுகிறார்கள்.. உடனே கடன் வாங்கி வீடு கார் என்று ஆடம்பரத்துக்கு மாறி விடுகிறார்கள்…
வாழ்க்கை ஸ்மூத்தாகப் போய் கொண்டிருக்கும் போது திடீரென்று கம்பெனி ஆட் குறைப்பு என்றும் பொருளாதார நெருக்கடி என்று சொல்லி வேலையை விட்டு நீக்கும் போதோ இல்லை கம்பெனியையே மூடி விடும் நேரத்தில் ஒவ்வொருவருக்கும் மன உளைச்சல். வீட்டுக்கு டியூ காருக்கு டியூ ஸ்கூல் பீஸ் என்று தடுமாற்றம்..அவர்களை தற்கொலை வரை தூண்டி விடுகிறது…
இப்படி தான் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒருவர் உயரமான கட்டிடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்..இது மாதிரியான சம்பவங்கள் இந்த விளையாட்டு ஆரம்பத்தில் நிறைய உண்டு.. படம் ஜூன் 2 ம் தேதி திரைக்கு வருகிறது..
சுமார் 200 தியேட்டர்களில் திரையிடப்பட உள்ளது ”என்றார்கள்.