“ஒரு ஆசம் தொடக்கம்” நிகழ்வுடன், தமிழ் புத்தாண்டை வரவேற்கிறது ஜீ5 !


ஜீ
5 தளத்தில் தமிழின் முன்னணி படைப்பாளி இயக்குநர் வெற்றிமாறனின் ஒரிஜினல் தொடர், பிரகாஷ் ராஜ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோரின் அடுத்த தொடர் மற்றும் தமிழ் பார்வையாளர்களுக்காக பிரத்யேகமாக தொகுக்கப்பட்ட சிறப்பான கதைகளுடன்  பல ஒரிஜினல்  தொடர்கள் வரவுள்ளன.

ஜீ5 தளத்தில் வரவிருக்கும், புதிய அதிரடி ஒரிஜினல் தொடர்கள்  பற்றிய அறிவிப்பு,  தமிழ் படைப்பாளிகளான இயக்குநர் வெற்றிமாறன், விஜய், வசந்த பாலன், கிருத்திகா உதயநிதி ஆகியோர் முன்னிலையில் வெளியிடப்பட்டது. நடிகர் பிரகாஷ் ராஜ், ராதிகா சரத்குமார், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர், இத்தளத்தில் வரவிருக்கும் தங்களது நிகழ்ச்சிகளை,  வைரல் ஹிட் “விலங்கு” தொடரின்  நடிகர்கள் மற்றும் குழுவினர் முன்னிலையில் அறிவித்தனர்.

ஜீ5 , சென்னையில் மிளிரும் நட்சத்திரங்கள் நிரம்பிய பிரமாண்டமாக நடந்த  “ஒரு ஆசம் தொடக்கம்”  நிகழ்ச்சியில் –  தமிழில் அடுத்தடுத்து வரவிருக்கும் அழுத்தமான கதைகளின் வரிசையை அறிவித்தது. தமிழின் முக்கிய படைப்பாளிகள் பங்குகொள்ளும் இந்த படைப்புகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை தந்துள்ளது.

தமிழின் பிரபல இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரிஜினல் தொடர்  “நிலமெல்லாம் ரத்தம்” எனும்  ஜீ5 பிரத்யேக தொடரை அறிவித்தார்.  இவருடன் பன்முக ஆளுமையாளரான பிரகாஷ் ராஜ் நடிப்பில்  ‘அனந்தம்’ என்ற அழகிய டிராமா தொடர்,  நடிகை ராதிகா சரத்குமார் நடிப்பில் திரில்லர் தொடர் “கார்மேகம்” மற்றும் அரசியல் டிராமாவான  “தலைமை செயலகம்” ஆகிய தொடருடன், கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் இளைஞர்கள் இதயம் வென்ற காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் வரவிருக்கும் “பேப்பர் ராக்கெட்” தொடர்கள் இந்நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது.

இவை தவிர, ஜீ5 தளத்தில், இயக்குநர் விஜய்யின் டீன் ஏஜ் டான்ஸ் டிராமா ஃபைவ் – சிக்ஸ்- செவன்- எயிட்,  வசந்த பாலன் இயக்கத்தில் ‘ தலைமை செயலகம்’ , எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கும் ‘கொலைகார கைரேகைகள்’, நாகா  இயக்கத்தில் ஒர த்ரில்லர் ‘ஐந்தாம் வேதம்’ , ஆகியவையுடன் மற்றும் பல ஆர்வமூட்டும் படைப்புகளான ‘அல்மா மேட்டர், ‘அயலி’ மற்றும் அருண் விஜய்,  ப்ரியாபவானி சங்கர் நடிக்கும் ‘யானை’ , விஜய் ஆண்டனி, சுரேஷ் கோபி, சோனு சூட் மற்றும் ரம்யா நம்பீசன் நடித்துள்ள தமிழரசன் படங்களும் அறிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அனைவரது பார்வையும் ஜீ5 இல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் ஒரிஜினல்  தொடரான ‘விலங்கு’ தொடரின் நடிகர்கள் மற்றும் குழுவினர் மீதும், பெரு வெற்றி பெற்ற  மலேசியா டூ அம்னீஷியா மற்றும் விநோதயா சித்தம் படங்களின் குழுவினர் மீதுமே  இருந்தது.

வலுவான தமிழ் கதைகளை வழங்கி வருவதன் மூலம் தமிழில் முன்னணி  இடத்தை பிடித்திருக்கும் ஜீ5, இந்தியாவின் பல மொழி பொழுதுபோக்கு தளமாக அதன் நிலையை மேம்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் ஜீ5 தளத்தில் திரையிடப்பட்ட சூப்பர்ஸ்டார் அஜித்தின் ‘வலிமை’ உலகளவில் வேகமாக 500 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைப் பெற்று மிகப்பெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது.

தமிழ் ஓடிடி தளம் பற்றி திரு. மணீஷ் கல்ரா Chief Business Officer, ZEE5 இந்தியா கூறியதாவது..,  
“ஆழ்ந்த ஈடுபாடு மற்றும் நம்பகத்தன்மை நிறைந்த பன்முக படைப்புகளை விரும்பும் ரசிகர்களை கவர்ந்திருப்பது  , ஜீ5 நிறுவனத்துக்கு மிகவும் மகிழ்ச்சி கலந்த உத்வேகமாக உள்ளது,  எங்களின் படைப்புகளுக்கு தமிழ் மக்களிடையே கிடைத்த வெற்றி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது,  தமிழ் கலைஞர்களை முன்னிறுத்தி ஜீ5 தமிழ் திரைத்துறையில்  ஏற்படுத்தியுள்ள தாக்கம் உலகளாவிய வரவேற்பை பெற்றுள்ளது, இந்த 2022 ஆம் ஆண்டு ரசிகர்களுக்கு இரட்டிப்பு விருந்தாக இருக்கும். ஏனெனில் நாங்கள் அனைவருக்குமான கதைக்களங்களை கொண்ட படைப்புகளை வெளியிட உள்ளோம். தமிழ் பொழுதுபோக்கு தளத்தில் மிகப்பெரிய அடையாளத்தை ரசிகர்களின் உதவியோடு பெற நாங்கள் காத்துக் கொண்டுள்ளோம், தமிழ் மொழி வர்த்தகம் எங்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. ஜீ5 ல் எங்களது தரத்தை மேலும் உயர்த்திக் கொண்டு, எங்களால் சாத்தியமான அனைத்தையும் ரசிகர்கள் மற்றும் எங்களின் சந்தாதரர்களுக்காக தொடந்து தருவோம்.”

Chief Cluster Officer – South, ZEEL திரு. சிஜு பிரபாகரன் கூறியதாவது…
ஜீ5-க்காக வலுவான கதைகளை உருவாக்குவதில் நாங்கள் வெற்றியடைந்துள்ளோம். எங்கள் வலுவான நிபுணத்துவம் மற்றும் சந்தை மதிப்பை கருத்தில்கொண்டு,  பார்வையாளர்களுக்கு பலதரப்பட்ட தொடர்கள் மற்றும் படங்களை  ஜீ5 வழங்குகிறது. இந்த வருடம் இன்னும் பல கதைகள் ஆச்சர்யமூட்டும் வகையில் இருக்கும். 10 க்கும் மேற்பட்ட ஒரிஜினல் தொடர்கள் மற்றும் பிளாக்பஸ்டர் வெற்றியடைந்த படங்கள், இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்காக வெளியாகவுள்ளது.  பிரகாஷ்ராஜ் நடிக்கும் “அனந்தம்”,  வெற்றிமாறன்-இன் “ நிலமெல்லாம் ரத்தம்”, கிருத்திகா உதயநிதியின் புதிய கதையமைப்பில் “ பேப்பர் ராக்கெட்” மற்றும் பிரபலமான ‘Fingertip  -2’ தொடர் என ரசிகர்களை சீட்டின் முனைக்கு இழுத்து செல்லும் தொடர்கள் வெளியாகவுள்ளன. இதுதவிர, தமிழ் ஓடிடி பிரிவின் எதிர்காலத்தை வரையறுக்கக்கூடிய புதிய திறமைகளை வெளிக்கொணரும் வகையில் நம்பிக்கைக்குரிய வளரும் இயக்குனர்களின் தொலைநோக்கு கதைகளை உருவாக்க நாங்கள் மிகுந்த ஆர்வமாக உள்ளோம்.”

President – Content and International Markets at ZEEL திரு. புனித் மிஸ்ரா, தங்களின் அடுத்தடுத்த படைப்புகள் மற்றும் நடிகர்களை பற்றிய சிறப்பம்சங்களை பற்றி கூறியதாவது..,
“இந்தியாவின் ஓடிடி தளங்களில்  ஜீ5 உடைய வளர்ச்சி எதிர்பார்ப்புகளையும் தாண்டியதாக அமைந்துள்ளது,  எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அதிலும் தமிழ் மொழியில் எங்களது படைப்புகளுக்கு ரசிகர்களிடையே கிடைத்துள்ள வரவேற்பு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. எங்களின் தெளிவான சிந்தனை மற்றும் யுக்திகள் இணைந்து சிறந்த கலைஞர்களால் உருவாக்கப்படும் சிறந்த கதைக்களங்கள், தமிழ் மற்றும் பிற மொழி வர்த்தகத்தை பெறுவதற்கு திறவுகோலாக உள்ளது. கதைகளுக்கான வடிவமைப்பு மற்றும் அணுகுமுறை எங்களை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டுகிறது, இதை #SoultoScreen என்று அழைக்கிறோம், இது கலாச்சாரம் மற்றும் மக்களைப் பற்றிய  எங்களின் நெருக்கமான புரிதலில் உள்ளது, மக்களின் வாழ்க்கையிலிருந்து ஈர்க்கப்பட்டு,  அவர்களின் கற்பனையைத் தூண்டும் வகையில், கதைகள் மற்றும் கதாபாத்திரங்களை உருவாக்கி வருகிறோம்.

சமீபத்திய தொழில்துறை அறிக்கைகளின்படி தற்போது இந்தியாவில் மிக அதிகமாக வளர்ந்து வரும் ஓடிடி தளம் ஜீ5,  100-க்கும் மேற்பட்ட வித்தியாசமான அணுகுமுறைகளை கொண்ட  கதைகளங்களை அளித்து பிரசிதிபெற்ற ஜீ5, ஒரிஜினல் கதைகளையும், சமூகத்தை பிரதிபலிக்கும் தற்காலத்திய கதைகருக்களையும், எல்லோரிடத்திலும் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தும் களங்களையும் தருவதில் முழுகவனத்தையும் செலுத்திவருகிறது. தற்போது 5 லட்சம் மணிநேரத்திற்கும் அதிகமான தொடர்கள் மற்றும் படங்கள் , 160-க்கும் அதிகமான சேனல்களையும் கொண்டுள்ளது. 3500 திரைப்படங்கள், 1750 தொடர்கள், 700 ஒரிஜினல்களை ஜீ5 கொண்டுள்ளது. அதுபோக இந்தியாவின் 12 மொழிகளில் படைப்புகளை உருவாக்கி வருகிறது: ஆங்கிலம், இந்தி, பெங்காலி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடா, மாராத்தி, ஒரியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி மொழிகளில் வழங்கி வருகிறது. 2022 ஆம் ஆண்டிற்கான ஒரு அற்புதமான கதை வரிசையை ஜீ5 தளம் கொண்டுள்ளது, ஜீ5  சந்தாதாரர்களுக்கு பரந்த அளவிலான பட்டியலை வழங்கும்.

ஜீ5 குறித்து:

ஜீ5 என்பது இந்தியாவின் ஓடிடி தளம் . மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் தேடும் பொழுதுபோக்கு அம்சங்களை, பல மொழிகளில் தரும்  கதைசொல்லி. ஜீ5 ஆனது Global Content Powerhouse, ZEE Entertainment Enterprises Limited (ZEEL) இல் இருந்து உருவான ஓடிடி தளம். இது பார்வையாளர்களுக்கு மிகவும் விருப்பமான ஓடிடி தளம்.  இதில் சிறந்த ஒரிஜினல்கள், இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், இசை, குழந்தைகள் நிகழ்ச்சி, Edtech, Cineplays, செய்திகள், நேரலை தொலைகாட்சி மற்றும் உடல்நலம் & வாழ்க்கை முறை சம்பந்தமான படைப்புகளும் இதில் அடங்கும். உலகளாவிய தொழில்நுட்ப வல்லுநர்கள் கூட்டமைப்பில் உருவான வலுவான ஆழமான தொழில்நுட்பங்கள், ஜீ5 தங்குதடையில்லா மற்றும் தனிப்பட்ட படைப்புகளை 12 மொழிகளிலும், பல சாதனங்களிலும், பல்வேறுபட்ட  நில அமைப்புகளிலும் தருவதற்கு உதவுகிறது.