நயன்தாரா, சத்யராஜ், அனுபம் கெர்,வினய் ராய். ஹனியா நஃபிசா
நடித்துள்ள படம். அஸ்வின் சரவணன் இயக்கி உள்ளார். ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளார்.
இது கொரோனா காலகட்டத்தில் நடக்கும் கதை.
வினய் ஒரு டாக்டர், கொரோனா காலகட்ட மருத்துவ சேவை நிர்பந்தத்தில் சிக்கிக் கொண்டு வீட்டைக் கவனிக்க முடியாமல் இருக்கிறார்.அவரது மனைவி நயன்தாரா, மகள் ஹனியா நஃபிசா.நயன்தாரா தந்தையாக சத்யராஜ். கிட்டார் கற்றுக் கொண்டு நட்சத்திரமாகும் கனவுடன் இருக்கிறார் நஃபிசா.
இதற்காக லண்டன் ட்ரினிட்டி காலேஜில் சேர்ந்து சேர்த்து கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறார் .இடமும் கிடைக்கிறது.முதலில் படிப்பு முக்கியம் என்று நயன்தாரா அதை ஒத்திப் போடுகிறார். ஆனால் தந்தை வினயோ மகளுக்கு ஆதரவு தருகிறார்.
வீட்டுக்குச் சரியாக வராமல் அன்பு காட்டாமல் தந்தை, வேலை வேலை என்று இருப்பதால் மகள் ஹனியா நஃபிசா வருத்தத்திலும் கோபத்திலும் இருக்கிறார்.
திடீரென்று ஒரு நாள் கொரோனா தாக்கத்தால் வினய் இறந்து விடுகிறார். மகள் மிகவும் மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்.தந்தையை, தந்தையின் அன்பைப் புரிந்து கொள்ளாத ஒரு குற்ற உணர்வு ஆட்டிப்படைக்கிறது. ஒரு நாள் ,இறந்தவர்களுடன் பேசும் மாந்திரீக முறையில் தந்தையுடன் பேச விருப்பப்படுகிறார் .அதற்கான ஆள் துணையுடன் பேச முயற்சிக்கிறார்.ஆனால் நடப்பது வேறு .இந்த செயல்பாட்டில் ஒரு தீய சக்தி புகுந்து கொண்டு விளையாடி ஆட்டிப் படைக்கிறது. முடிவு என்ன என்பதுதான் கதை.
ஒரு கிட்டார் பிரியையின் கனவு ,தந்தை அன்பு,ஒரு பொறுப்புள்ள தாயின் அரவணைப்பு, எதையும் சுலபமாக எடுத்துக் கொள்ளும் தாத்தாவின் அன்பு என்றே கதை தொடங்குகிறது. போகப் போக பரபரப்பு தீ பற்றிக்கொள்கிறது. பல இடங்களில் நம்மை அறியாமல் திடுக்கிடுகிறோம்.
இந்த திகில் தீ படம் முழுக்கப் பற்றி எரிகிறது.இடைவேளை இன்றி படம் ஒரே மூச்சில் படம் முடிகிறது ஒரு துளியும் சலிப்பூட்டாமல்.
இதில் பேய் ஓட்டுபவராக அனுபம் கெர் வருகிறார்.
பேய் ஓட்டும் உச்சகட்ட காட்சியில் தனது நல்ல நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். நயன்தாரா மகளின் மீதுள்ள அன்பையும் தீய சக்தி வசப்பட்ட மகளைப் பார்த்து வருத்தத்தையும் என ஒரே நேரத்தில் நல்லதொரு நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.சத்யராஜ் தன் தங்கைச் சிறப்பாக செய்துள்ளார்.
ஹனியா நஃபிசாவின் நடிப்பு சிறப்பில் .இப்படி நயன்தாரா, நபிஃசா, அனும் கெர் ,சத்யராஜ், வினய் என அனைவரும் நடிப்பில் ஸ்கோர் செய்துள்ளார்கள்.
படத்திற்கு இசை பிரித்வி சந்திரசேகர்.பின்னணி இசையில் கலக்கியுள்ளார். ஹாலிவுட் தரத்தில் கொடுத்துள்ளார்.ஒளிப்பதிவு மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி.
ஒளிப்பதிவும் ஒலி வடிவமைப்பும் படத்திற்குப் பெரிய பலமாக அமைந்துள்ளன.
ஹாரர் ரசிகர்களுக்கு ருசியான விருந்து கனெக்ட்!