இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர் அவர்களின் 93- வது பிறந்தநாள் விழாவை அவருக்கு நெருக்கமான எளிய மனிதர்கள் கொண்டாடினார்கள்.இந்த விழாவை பாலச்சந்தரின் உதவியாளர் மோகன் முன்னெடுத்து நடத்தினார்.’அற்ற குளத்து அறு நீர்ப் பறவைகள்’ மத்தியில் ‘கொட்டியும் ஆம்பலுமாய் ‘ ஒட்டி உறவாடிய சில மனிதர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டார்கள்.சாலிகிராமம் கோல்டன் பேரடைஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.




கே.பியின் மறைவுக்குப்பின் ஆண்டுதோறும் கே.பியின் பிறந்த நாளை ஏதாவது ஒரு வகையில் கொண்டாடும் மோகன், இந்த விழாவில் கேக் வெட்டி பிறந்தநாள் வாழ்த்து கூறித் தனது ஆசானுக்கு மரியாதை செலுத்தினார்.