![](https://tamilcinemareporter.com/wp-content/uploads/2017/12/IMG_8842-300x200.jpg)
Chennai District Masters Athletic Association’ தங்களது 36 வது தடகள சந்திப்பு சமீபத்தில் புகளூரில் நடத்தினர் . இது 35 முதல் 90 வயதினருக்கான தடகள சந்திப்பாகும். சென்னையை சேர்ந்த 185 தடகள வீரர்களும் , ஒட்டுமொத்தமாக எல்லா மாவட்டங்களையும் சேர்த்து 1600 நபர்கள் பங்கேற்றனர்.
![](https://tamilcinemareporter.com/wp-content/uploads/2017/12/IMG_8891-300x200.jpg)
இதில் 52 பெண் போட்டியாளர்கள் 37 தங்க பதக்கங்களும் , 24 வெள்ளி பதக்கங்களும் , 15 வெண்கல பதக்கங்களையும் வென்றனர். ஆண்கள் பிரிவில் 133 போட்டியாளர்கள் 24 தங்க பதக்கங்களும் , 33 வெள்ளி பதக்கங்களும் , 20 வெண்கல பதக்கங்களும் வென்றனர். சென்னை மாவட்டம் , ”பெண்கள் சாம்பியன்ஷிப்’ ‘ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்’ மற்றும் ‘மேடம் ஜெயலலிதா கோப்பை’ ஆகியவற்றை வென்றது. போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை பிடித்த வீரர்கள் பிப்ரவரி மாதம் பெங்களூரில் நடைபெறவுள்ள இந்திய அளவிலான நேஷனல் தடகள மீட்டில் தமிழ்நாட்டு அணி சார்பாக பங்கேற்கவுள்ளனர்.
![](https://tamilcinemareporter.com/wp-content/uploads/2017/12/IMG_8907-300x200.jpg)
திரு. W.I.தேவாரம் மற்றும் I.P.S ப்ரெசிடெண்ட் TNMAA ஆகியோர் இந்த தடகள மீட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். ‘Chennai District Masters Athletic Association’ ப்ரெசிடெண்ட் திரு.ஷெண்பகமூர்த்தி பேசுகையில் , ” இவ்வாறான நிகழ்ச்சிகள் மூத்த குடிமக்களின் நலனை மேன்படுத்தும். இது போன்ற தடகள போட்டிகள் நமது நாட்டில் இன்னும் பல ஆண்டுகாலம் வெற்றிகரமாக நடக்கும் என்பதை பங்கேற்றவர்கள் ஆதரவும், உற்சாகமும் நிரூபித்துள்ளது ”.