சினிமாவில் கதை விவாதங்கள் தேவையா?

பெரிய பெரிய பிரம்மாண்டப் படங்களிலும் பெரிய பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களிலும் கண்களை மிரள வைக்கும் காட்சிகள் இருந்தாலும் பல காட்சிகள் தொடர்பற்றும் தர்க்கரீதியாக குறை உள்ளதாகவும் சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பும் படியாகவும் இருப்பதை நாம் பல படங்களில் பார்க்கிறோம்.

இப்போதைய பெரிய வெற்றி படங்களில் கூட இந்த லாஜிக் மீறல்கள் இருக்க வே செய்கின்றன.
அவை ஒரு படத்தின் கதையின் நம்பகத்தன்மையைக் குறைக்கும் என்பதை யாருமே நினைத்துப் பார்ப்பதில்லை.
இதற்கெல்லாம் காரணம் ஒவ்வொரு கதையும் அது செல்லும் பாதையையும் பாத்திரங்களின் இயல்பையும் அவற்றின் போக்கையும் கேள்விகளுக்கு உட்படுத்தி விவாதம் செய்யாமல் இருப்பது தான். இந்நிலையில் ஒரு திரைப்படத்திற்கு கதை விவாதம் எந்த அளவிற்குத் தேவை என்பதை பல படங்களின் கதை விவாதங்களில் ஈடுபட்ட திரை எழுத்தாளர் என். ஏகம்பவாணன் விளக்குகிறார் இங்கே!

“சிறு படங்கள் பெரும் படங்கள் என்று எந்த வித்தியாசமும் கிடையாது. எந்த படமாக இருந்தாலும் நல்ல கதை,திரைக்கதை, வசனம் எனும் அடித்தளம் அமைந்தால் மட்டுமே வெற்றி பெற இயலும்.

நல்ல திரைக்கதைக்கான சாத்தியக்கூறு கதை விவாதத்தில் மட்டுமே சாத்தியப்படும்.

கதை விவாதத்தில் அப்படி என்ன அற்புதம் நிகழ்ந்துவிடும்?

ஒரு திரைப்படத்திற்குக் கதை விவாதத்தின் அவசியம் என்ன ?

1. கதை நேர்த் திசையில் செல்கிறதா ,கிளைக் கதைகளில் திசைமாறி மடைமாற்றம் அடைந்துள்ளதா என்பதை பலரும் பலவாறு பேசி கதை சரியான திசையில் பயணிப்பதை உறுதி செய்வர்.

2. தர்க்க மீறல்களை அதாவது லாஜிக்ஸ் பிராப்ளங்களை பல நபர்கள் தங்கள் கோணத்தில் ஆராய்ந்து சரி செய்வர்.

3.போட்டி மனப்பான்மையுடன் விவாதத்தில் பங்கேற்கும் பலரும் காட்சிகளைச் சொல்வர்.அவற்றில் கிடைக்கும் சிறந்த வலுவான வளமான காட்சிகளைத் தேர்வு செய்யலாம்.

4. பலரின் பார்வை மாறுபட்ட கோணத்துடனான விமர்சனம் கதை விவாதத்தின்போதே கிடைக்கும்

5.திரைக்கதையில் இருக்கும் ஓட்டைகள் சுட்டிக்காட்டப்பட்டு அவை பலரின் சிந்தனையுடன் சரிசெய்யப்படும்

6. பல நாள்,மாதங்கள் கழித்து கதையில் நமக்குத் தோன்றும் கேள்வியும் தீர்வும் கதை விவாதத்தில் உடனே கிடைக்கும்

7. திரைக்கதையின் பலம் பலவீனம் ஆராயப்பட்டு,பலவீனம் குறைக்கப்பட்டோ நீக்கப்பட்டோ சுவாரஸ்யத்தை அதிகரிக்க முடியும்.

8. நல்ல வசனங்கள்,பல பஞ்ச் வசனங்களும் கதை பேசும் போதே கிடைக்கும்

9. கதைக்குத் தேவையான ஒத்துப்போகிற கருத்துடைய திரைப்படங்கள்,நூல்கள் பற்றி எடுத்துரைப்பர்.அது திரைக்கதைக்குக் காட்சிக்குப் பெரிதும் வலு சேர்க்கும்,இன்ஸ்பிரேசனாக அமைந்து புதிய காட்சிகளை உருவாக்கவோ,உருவாக்கிய காட்சியை மெருகூட்டவோ,காட்சி சிறப்பைச் சரிபார்க்கவோ உதவும்.

10.தேவையற்ற காட்சிகளைப் பேசி படப்பிடிப்பிற்கு முன்பே,எழுத்தளவில் நீக்கிவிடலாம்.

இன்னும் பல நன்மைகள் கதை விவாதத்தில் உள்ளன…

ஒரு தேர்ந்த திரைப்படம் இரண்டு மேஜைகளால் தீர்மானிக்கப்படுகிறது.
ஒன்று திரைக்கதையை உருவாக்கும் மேஜை…‌
மற்றொன்று
படத்தொகுப்பு மேஜை..‌.
இதைச் சொன்னவர் இந்திய சினிமாவின் உலக அடையாளம் எனப் போற்றப்படும் திரு சத்யஜித்ரே
(ஆதாரம் : அவர் எழுதிய our films and their films…எனும் நூல் )

கதை வெளியே தெரிந்துவிடும் என்ற பயத்தை விடுங்கள்.
சினிமா என்பது கூட்டு முயற்சி ,எல்லோரும் திருடர்கள் அல்ல,அவ்வளவு எளிதல்ல படம் கிடைப்பதற்கான வாய்ப்பு.
( நீங்கள் கதையைப் பதிவு செய்வதற்கு அறிவுறுத்தி வழிமுறைகள் சொல்லப்படும்)

உலகிற்கு நீங்கள் இயக்குநராக வெற்றி பெற்றது மட்டுமே தெரியும்.
அந்த கதையை யார் பேசினார்கள்,காட்சிகளை யார் சொன்னார்கள் என்று யாருக்கும் தெரியப்போவதில்லை.ஏன் கதை விவாதம் என்றோ,திரைக்கதை என்றோ,வசனம் என்றோ நீங்கள் பிறருக்கு cridit அளித்தால் கூட,தமிழ்சினிமாவில் இயக்குநர் மட்டுமே பிரதானமாக அறியப்படுவார்.

மற்றவர்களை நம் கதைக்காகச் சிந்திக்க வைப்பதும்,சிந்திப்பதும் ஒரு கொடுப்பினை என்றே கூற வேண்டும்.

கதை தனக்குத் தேவையானதை கேட்கும்.
ஒரு குழந்தையைப் போல,
எழுத்தாளன் ஒரு தாயைப் போல – அதன் அழுகையை,தேவையை அறிந்து பாலூட்டவேண்டும்.
பலர் காதுகேளாதது போல இருந்துவிடுகிறார்கள்.அதனாலேயே பார்வையாளர்கள் கேள்வி கேட்கிறார்கள்.

ஒரு வலுவான வண்டியைப் பலம் வாய்ந்த பல குதிரைகளால் மட்டுமே வேகமாகவும்,பாதுகாப்பாகவும் இழுக்க முடியும்.எப்போதும் சினிமா கதை வலுவான திரைக்கதை,வசனத்துடனேயே கட்டி இழுக்கப்பட வேண்டும்.

பிரமிப்பு என்பது படத்தின் பிரேம் ரிச்சாக வருவதற்கு
செலவு செய்வதாலோ, பெரிய வண்ணமயமான லொகேசனில் படம் பிடிப்பதாலோ,மேக்கிங் என்ற பெயரில் உபகரணங்களை உபயோகிப்பதாலோ,கும்பல் கும்பலாக நடிகர்களைக் காட்டுவதாலோ வருவதைக்காட்டிலும், கதையோடு ஒன்றிய உணர்ச்சிமயமான காட்சி மூலம் ஏற்படும் பிரமிப்பு காலம் கடந்து நிற்கும்.

கதையை நம்பித்தானே படம் எடுக்கிறீர்கள்?
அந்தக் கதைக்கு சில லட்ச ரூபாய்கள் செலவு செய்வதால் ஒன்றும் குறைந்து போய்விடமாட்டீர்கள்.
சொல்லப்போனால் அது பல மடங்கு Story Rights என்ற பெயரில் திரும்பக் கிடைக்கும்.ஆகவே பட்ஜெட்டிற்கு ஏற்ப புகழ்பெற்ற எழுத்தாளர்களையோ,மூத்த சாதித்த எழுத்தாளர்களையோ திரைக்கதைக்குப் பயன்படுத்தலாம்.அல்லது மீடியம் பட்ஜெட் படமெனில் – பழக்கமான இயக்குநர்கள் அல்லது பல பிரபல படங்களில் பணிபுரிந்த இணை இயக்குநர்களையோ பயன்படுத்தலாம். மிகச்சிறிய படஜெட் எனில் தெரிந்த இணை துணை இயக்குநர்கள் உடனாவது கதை பேசியாக வேண்டும்.சில இளம் உதவி இயக்குநர்களையும் குறும்பட இயக்குநர்களையும் பயன் படுத்துவது சிறப்பைத் தரும்.தகுதியுடையோர் என நம்பும் யாரை வைத்தாவது குறைந்தது 10 நாட்களாவது கதை பேச வேண்டும்.10 முதல் 15 நாட்களாவது வசனம் எழுத வேண்டும்.

ஓர் இளம் இயக்குநரை,புதிய இயக்குநரை Discussion இருந்தா கூப்பிடுங்க,என்று கேட்டால்,Bounded Script ready , நானே முடிச்சிட்டேன் என்கிறார்கள்.ஆனால் படம் காட்டும்போது பல் இளிக்கிறது.நீங்கள் ஒரு கதையைச் சொல்லித்தான் bounded செய்து தான் தயாரிப்பாளரை ஓகே செய்திருப்பீர்கள்.ஆனால் அது first version script என்பதை இயக்குநரும் தயாரிப்பாளரும் உணர வேண்டும்.பெயர் போட்டோ / போடாமலோ வசனம் எழுத பல மூத்த இணை இயக்குநர்கள் தயாராக உள்ளார்கள்.அவர்கள் சொல்வதை அப்படியே எடுக்க வேண்டிய / ஏற்க வேண்டிய அவசியம் இல்லை.அவற்றில் சிறந்ததை எடுத்துக்கொண்டால் போதும்.

சமீபத்தில் ஒரு மூத்த இணை இயக்குநருடன் கதை பேச வேண்டி வந்தது.அவரை பலவாறு பல நண்பர்கள் பயமுறுத்தி வைத்தார்கள்.
ஆனால் அவர் நான் பேசிய கதைக்கு ஏற்ப , தனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் சொன்னார்.பார்த்த படத்தின் காட்சிகள், படித்த புத்தகத்தில் உள்ள ஒற்றுமைகள்,ஒரு விசயத்தைப் பற்றி தனக்குத் தெரிந்த தரவுகள் என எல்லாவற்றையும் பகிர்ந்தார்.அதில் கதைக்குத் தேவையானதை உள்வாங்கி சரிபார்த்தோம்.அவர் சொன்னதற்கு ஒப்பான காட்சிகளுக்கு இணையாகக் காட்சிகள் வைத்தோம்.சம்பளம்,நேரம் என எல்லாவற்றிலும் தன்னை adjust செய்து நடந்து கொண்டார்.கதையில் இந்த feel வந்தா நல்லா இருக்கும்.இந்த மாதிரி காட்சி இருந்தா நல்லா இருக்கும். முன் கதைக்கும் இப்போ சொன்ன காட்சிக்கும் பொருத்தமே இல்லை என்று சரியாகச் சொன்னார்,சரி செய்து கொண்டோம்.கதை நேர்த்தியானது.

ஈகோ இல்லாமல் கெத்து காட்டாமல் நான்கு சுவர்களுக்குள் கதையைப் பிறரோடு விவாதிப்பதால் நீங்கள் குறைந்துபோக மாட்டீர்கள்.அது தகுதி குறைவானதில்லை.அது உங்கள் தகுதியைப் படத்தின் வெற்றியின் வாயிலாக உயர்த்தவே செய்யும்.

இங்கே உழைக்கிற உதவி இயக்குநரைச் சம்பளம் இல்லாமல் அல்லது குறைந்த சம்பளத்தில் எப்படி வேலை வாங்குவது என்ற எண்ணம் சிலருக்கு இருக்கிறதே தவிர,அவர்களின் உழைப்பிற்கான அங்கீகாரமோ சன்மானமோ அளிக்கத் தயாரில்லை.
அவன் மனவலியே அவனைப் பயன்படுத்தியவன் அங்கீகாரத்தை வெற்றியைத் தடுத்துவிடுகிறது.

கூட்டு முயற்சியால் வெற்றி பெற்ற பலரும்,பின்னர் சுயநலமாக மாறியதாலேயே தோற்றுப்போனார்கள்.பகிர்ந்து கொடுப்பவனுக்கு காலம் கொடுத்துக் கொண்டே இருக்கும்.

உங்கள் கதை நல்ல என்றாலும்கூட,கதையில் கண்களுக்குப் புலப்படாத தவறுகள்,கேள்விகள்,குறைகள் இருக்கலாம்.
நல்ல வண்டிக்கு oil check,Air check செய்வதில்லையா?
ஒரு சிறு டயர் தேய்மானம் வண்டியை கவிழ்ப்பதில்லையா? தவறுகளை சுட்டிக்காட்டுவதால் நீங்கள் அறிவாளியில்லை என்று அர்த்தமில்லை ,கண் முன்பு இருக்கும் பொருளை எதோ நினைவோடு வீடு முழுக்க தேடுவதில்லையா? பின் மற்றவர்கள் எடுத்து தருவதில்லையா அது போலதான்.

20 லட்சம் செலவு பண்ணா கூட ஆடியஸ் கை தட்ட மாட்டான்.ஆனா,2 லட்சம் ஒரு எழுத்தாளனுக்கு குடுங்க,அவன் சிந்தனையினால் ஆடியன்ஸ கை தட்ட வைப்பான்.

ஒரு பார்வையாளனைச் சிரிக்கவைக்கவும், சிந்திக்கவைக்கவும்,ஏமாற்றி போக்கு காட்டி ஆச்சர்யமூட்டவும் ஒரு மெஜிசியனைப் போல தெரிந்து வைத்திருப்பவனே நல்ல எழுத்தாளன்.

கதை,திரைக்கதை, வசனம் & இயக்கம் நானே,என்று சொல்லி தோற்றுப்போவதைவிட ,கதையை விவாதித்தோ,பிறருக்கு திரைக்கதை, வசனம் என அங்கீகாரம் அளித்தோ இயக்குநராக வெற்றி பெறுவதே நிரந்தர வெற்றிக்கான படிக்கட்டு ஆகும்.

கதை விவாதம் செய்யும் பல அனுபவசாலிகள் ,நியாயமான சம்பளத்தைத் தவிர வேறெந்த எந்த அங்கீகாரத்தையும் எதிர்பார்ப்பதில்லை.

கண்டிப்பாகக் கதை விவாதங்களில் அனுபவசாலியான உதவி இயக்குநர்களுடன்,இளம் உதவி இயக்குநர்களையும் உடன் வைத்துக்கொள்வது சிறந்ததே.

கதை விவாதத்திற்கு தனிக்குழு,படபிடிப்பில் பங்கேற்க தனிக்குழு என இரண்டு தரப்பை உபயோகிக்கலாம்.அப்படி இரு தரப்பைப் பயன்படுத்த முடிவெடுத்தால் படத்தில் பணிபுரிய உள்ள இணை இயக்குநர் & அசோசியேட் இயக்குநர் என ஓரிருவரை கதை விவாதத்தில் பங்கேற்கச் செய்வது சிறப்பு.ஏனெனில் கதையை,கதாபாத்திரங்களின் தன்மைகளை அறிந்து படபிடிப்பில் பணியாற்ற அவர்களுக்கு பெரிதும் உதவும்.அவர்களின் சிந்தனையும் பங்காற்றலும் கதைக்கு கிடைக்கும்.

SCREEN WRITERS TEAMல் ஓரிரு படங்கள் இயக்கிய இயக்குநர்கள் ,பத்து பதினைந்து படங்களுக்கு மேல் பிரபல இயக்குநர்களிடம் பணி புரிந்த இணை இயக்குநர்கள்,ஒரு சில படங்கள் மட்டுமே பணி புரிந்த இளம் உதவி இயக்குநர்கள்,short film Directors எனப் பலரும் உள்ளனர். இவர்கள்
தமிழ்,ஆங்கிலம்,இந்தி மொழிகளில் டைப் செய்யும் திறமையுள்ளவர்கள் .

திறமையும் , அனுபவமும் வாய்ந்த SCREEN WRITERS TEAM ( Script Doctors ) GHOST WRITERS ஆக பல திரைப்படம் மற்றும் வெப்சீரியஸ்களுக்கு கதைகள் பேசியும், வசனம் எழுதியும் பணி புரிந்து வருகிறார்கள்.நீங்கள் விரும்பினால் மட்டுமே அங்கீகாரம் ( Title cridit ) அளிக்கலாம்.

ஆகவே தங்களின் திரைப்படம்,வெப்சீரிஸ் ஆகியவற்றிற்கு கதை பேச,திரைக்கதை எழுத,வசனம் எழுத,நகைச்சுவை சேர்க்க,திரைக்கதையை மறுபரிசீலனை செய்ய தயங்காமல் இவர்களை அழைக்கலாம்..” என்று கூறுகிறார்.

இது பற்றி மேலும் பேச விவாதிக்க தொடர்புக்கு,
என்.ஏகம்பவாணன்,
9940074009,