சீயான் விக்ரம், தமன்னா, ஸ்ரீமன் நடிப்பில் வேளியான சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் தயாரிப்பாளர் தாணு, படத்தின் தயாரிப்பாளர் பார்த்திபன், சீனு, விக்ரம், ஸ்ரீமன், டைரக்டர் விஜய் சந்தர். கல்லூரி வினோத், ஆடை வடிவமைப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தயாரிப்பாளர் தாணு பேசுகையில்,” இந்த படத்திற்கு தற்போது பெரிய அளவில் ஆதரவு கிடைத்து வருகிறது. மலேசியாவில் கபாலி 72 சென்டர்களிலும், ஸ்கெட்ச் 71 சென்டர்களிலும் திரையிடப்பட்டிருக்கிறது. தஞ்சாவூரில் இந்த படம் ஒரேயொரு திரையரங்கில் திரையிடப்பட்டது. தற்போது நான்கு திரையரங்குகளில் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் பெரிய அளவில் வெற்றிப் பெற்றிருக்கிறது என்பதற்கு இதுவே ஒரு சாட்சி “’ என்றார்.
விக்ரம் பேசுகையில்,” கமர்சியலாக ஒரு படம் பண்ணவேண்டும் என்ற நினைத்து, அதற்காக கதைகளை கேட்டுக்கொண்டிருந்தேன். கேமராமேன் சுகுமார் மூலமா டைரக்டர் விஜய் சந்தர் அறிமுகமாகி, என்னிடம் கதையைச் சொன்னார். அந்த கதையை கேட்டவுடன் பிடித்துவிட்டது. இதுக்காக நான் சுகுமாருக்கு தான் தாங்ஸ் சொல்லணும். இந்த படத்துக்கு சுகுமார் பயங்கரமா வொர்க் பண்ணியிருக்கார். படத்தோட டோன் ரியலிஸ்டிக்காகவும், கமர்சியலாவும் இருக்குறதுக்கு அவர் தான் காரணம். அதவிட டைரக்டர் விஜய் இந்த கதையை பிரசண்ட் பண்ண ஸ்டைல் ரொம்ப புதுசா இருந்துச்சி. அவரோட காஸ்டிங் ஹண்ட்டிங்லேர்ந்து சின்ன சின்ன டீடெயில் வரைக்கும் அவரு எல்லாம் புதுசா இருக்கணும்னு நெனச்சி பண்ணார். அவரோட டயலாக், சென்ஸ் ஆஃப் ஹியூமர், பஞ்ச் டயலாக், ஸ்லாங், மியூசிக் சென்ஸ் எல்லாம் சூப்பரா இருக்கும். சூட்டிங் ஸ்பாட்ல நா கேட்டா கூட பஞ்ச் டயலாக்க உடனே சொல்வார். மாத்தி சொல்லுங்கன்னு சொன்னாக்கூட உடனே மாத்தி அத விட பவர்ஃபுல்லா சொல்வார். அவ்வளவு டேலண்ட் உள்ள கிரியேட்டர். இந்த படத்தோட ஃபர்ஸ்ட் ஓபனிங்கே ‘கனவே கனவே..’ என்ற பாடலோடத்தான் ஆரம்பிச்சது.
இந்த படம் ரிலீஸானப்புறம் தொடர்ந்து முப்பது நாப்பது தடவ படத்த ஆடியன்சோட பாத்துட்டு இருக்கார். ஆடியன்ஸ் ரசிக்கிறத இவர சந்தோஷமா ரசிச்சார். நா எப்படி 1999 டிசம்பர் 10 சேது ரிலீஸானப்போ ஒவ்வொரு தியேட்டருக்கா போயி ஆடியன்ஸ் என்ஜாய் பண்றத ரசிச்சஅதே மாதிரி இப்போ டைரக்டர் விஜய் ரசிச்சிட்டு இருக்கார். இந்த சந்தோஷம் எப்படியிருக்கும்னா ஒரு பொண்ண லவ் பண்றா மாதிரி இருக்கும். மனசுல சந்தோஷம் இருக்கும். தூக்கம் வராது. பசியிருக்காது. இந்த மாதிரி ஒரு வெற்றியை கொடுத்ததுக்காக டைரக்டர் விஜய் சந்தருக்கு நன்றி தெரிவிச்சுக்குறேன்.
இந்த படத்தோட ரிலீஸ தாணு சார் கையில் சென்றவுடன் நா சந்தோஷமாயிட்டேன். அவருக்கு மார்க்கெட்டிங் ஸ்ட்ராடஜி அத்துப்படி. இந்த படத்தோட ப்ரொடியூஸர்ஸ் பார்த்தி அண்ட் சீனு, இவங்க டைரக்டருக்கு முழு சுதந்திரம் கொடுத்தாங்க. படத்துக்கு என்ன வேணும்னு கேட்டு கேட்டு செஞ்சாங்க. எல்லாரும் கேக்குறாங்க. ஏன் இப்படி ஒரு படம்னு? பட், இந்த படம் எப்படி கமர்சியலா சக்ஸஸ் ஆவும்னு எனக்கு மட்டும் தான் தெரியும். இப்போ கூட ஸ்கெட்ச்சுக்கு தியேட்டர் இன்கிரீஸ் ஆயிட்ருக்குன்னு நியுஸ் வந்துட்டேயிருக்கு. இத தான் தாணு சாரும் உங்ககிட்ட சொன்னார். நா கூட சத்யம்ல மேட்னி ஷோவுக்கு போனேன். எவ்வளவு கூட்டம். சத்யம்னாலே ரசிகர்கள் அமைதியா படத்த ரசிப்பாங்க. ஆனா ஸ்கெட்ச்சா கலாட்டாவா ஆடியன்ஸ் பாத்தப்போ எனக்கு சந்தோஷமாயிருந்தது.
இந்த படத்துக்கு தமன் சாரோட பேக்ரவுண்ட் ஸ்கோர் பிரமாதம். பல சீன எலிவேட் பண்றதே தமனோட பிஜிஎம் தான். உண்மையச் சொல்லணும்னா இந்த படத்துக்கு மியூசிக்கும் ஒரு கேரக்டரா ஆடியன்ஸ ரீச் பண்ணிச்சி.இதுக்காக தமனுக்கு ஸ்பெஷல் தாங்க்ஸ்
இந்த படத்தோடஓபனிங்லேர்ந்து சாங்கோட லிரிக் வீடியோவ கிரியேட் பண்ணி வெளியிட்டு இந்த ஸ்கெட்ச்ச பத்தி ஹைப் கொடுத்த மகேசுக்கு நன்றி.
இந்த படத்துக்கு என்னோட ஃபேன்ஸ் கொடுத்த ஆதரவு மறக்க முடியாதது. ஒவ்வொரு வீடியோவ சோசியல் மீடியாவுல அப்லோட் பண்றதிலிருந்து. ஸ்கெட்ச்சோட டீ சர்ட்ட போட்டுகிட்டு டான்ஸ் ஆடிகிட்டே படம் பாத்து என்ஜாய் பண்றது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது. ஒவ்வொரு ரசிகர்களும் அவங்க வீட்ல ஒருத்தர என்ன கொண்டாடுறது எனக்கு கிடைச்ச பெரிய கிஃப்ட்.
என்னோட லைப்ல லாஸ்ட் இயர் என்னோட பொண்ணுக்கு கல்யாணம் ஆச்சி. என்னோட அப்பா தவறிட்டாங்க. ஆனாலும் இந்த மீடியாவோட சப்போர்ட் நா எதிர்பார்த்தவிட பெரிசா இருந்திச்சி. அதுக்கு எவ்வோ நன்றி சொன்னாலும் அது சாதாரணமானதாகத்தான் இருக்கும். இருந்தாலும் நன்றி.
சூரி நடித்த காட்சிகள் குறைக்கப்பட்டதற்கு காரணம் நான் தான். அவரிடம் அதைப் பற்றி சொன்னதும் பெரிய மனது பண்ணி சரியென்றார். இதற்கு பிரயாசித்தமாக மற்றொரு படத்தில் அவர் ஹீரோவாகவும், நான் காமெடியனாகவும் நடிக்க தயார். இல்ல இரண்டு பேரும் ஹீரோவா நடிக்க ரெடி. இல்ல இன்னொரு படத்துல அவர் கூட சேர்ந்து நடிக்கணும். இருந்தாலும் சூரி ஒரு பர்பெக்ட் ஜென்டில்மேன். படபிடிப்புக்கு வருவது தெரியாது. போவதும் தெரியாது. பாஸ்ட்டா போற ஸ்கிரிப்ட்ல இவரோட சீன் ஸ்பிடு பிரேக் மாதிரி இருந்ததால தூக்கிட்டோம். இதுக்கு காரணம் நான் தான்.அதுக்காக சூரிகிட்ட நா ஸாரி கேட்டுகிறேன்.
இந்த படத்திற்காக உழைத்து அனைத்து கலைஞ்ர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
இயக்குநர் விஜய் சந்தர் பேசுகையில்,” இந்த படத்தில் ஒரு பாடலை எழுதியதற்கு விக்ரம் சாரின் தூண்டுதல் தான் காரணம். ஒருவரிடம் இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வருவதில் விக்ரமிற்கு நிகர் அவர் தான். இந்த படத்துல என்னோட ஸ்கிரிப்ட் லாஸ்ட் டிவென்டி மினிட்ஸ் தான் நான் ஹோல்ட் பண்ணியிருப்பேன். அத ஆடியன்ஸ கரெக்ட்டா ரீசிவ் பண்ணி ரியாக்ட் பண்ணதாலத்தான் இந்த படம் சக்ஸஸ் ஆச்சி. இந்த படத்திற்காக உழைத்து அனைவருக்கும் நன்றி.” எனறார்.