சென்னை 13வது சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் லென்ஸ் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஆன்லைன் குற்றங்கள் பற்றிய அழுத்தமான த்ரில்லராக உருவாகியிருக்கிறது லென்ஸ் படம். ஜெயப்பிரகாஷ் எழுதி இயக்கியுள்ள இந்தப் படம் விரைவில் திரைக்கு வருகிறது.
இந்தப் படத்துக்கு ஏற்கெனவே டெல்லியில் நடந்த பயாஸ்கோப் க்ளோபல் திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதினைப் பெற்றார் இயக்குநர் ஜெயப்பிரகாஷ்.
இந்த நிலையில் சென்னையில் நடக்கும் 13வது சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிட லென்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஆனந்த் சாமி, ஜெயப்பிரகாஷ், அஸ்வதி, மிஷா கோஷல் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு சித்தார்த் விபின் பின்னணி இசையமைத்துள்ளார். சுப்பிரமணியபுரம் புகழ் எஸ்ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஜனவரி 6 முதல் 13-ம் தேதி வரை சென்னையில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் லென்ஸ் படத்தைக் காணலாம்.
தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம்..
எழுத்து – இயக்கம்: ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன்
இணைத் தயாரிப்பு: சித்தார்த் விபின்
எடிட்டிங்: ஜெய்னுல் அபிதீன் – காஜின்
ஒளிப்பதிவு: எஸ் ஆர் கதிர்
கலை: விஆர்கே ரமேஷ்
மக்கள் தொடர்பு: எஸ் ஷங்கர் – கேஎஸ்கே செல்வா
இசை: சித்தார்த் விபின்
தயாரிப்பு: க்ளோவிங் டங்ஸ்டன்