செலிபிரிட்டி பாட்மிண்டன் லீக் சீசன் – ஒன்றில்’ கலந்து கொள்ளும் ‘சென்னை ராக்கர்ஸ்’, தங்கள் அணியின் வீரர்களையும், விளம்பர தூதரையும் இன்று சென்னையில் ஒரு நட்சத்திர ஓட்டலில் அறிமுகப்படுத்தியது.
நடிகர் சங்கத்தலைவர் நாசர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ‘சென்னை ராக்கர்ஸ்’, அணிக்கான பாடலையும் ,கொடியையும் அறிமுகப்படுத்தினார். விழாவில் அணியினர் கலந்து கொண்டனர்.
செலிபிரிட்டி பாட்மிண்டன் லீக் சீசன்-1 ‘சென்னை ராக்கர்ஸ்’ பற்றி!
நடைபெற இருக்கும் ‘2016 ஆம் ஆண்டுக்கான செலிபிரிட்டி பாட்மிண்டன் லீக் ஆட்டத்தில்’, தமிழ்நாட்டின் சார்பில் விளையாட இருக்கும் அணி தான் ‘சென்னை ராக்கர்ஸ்’. தமிழ் திரையுலகை சார்ந்த சிறந்த நட்சத்திரங்களை சென்னை ராக்கர்ஸ் அணி உள்ளடக்கி இருக்கிறது..
இந்தியாவின் முன்னணி ஐ டி நிறுவனங்களுக்காக பணிபுரிந்து வரும் ‘டாட் காம் இன்போவே’, ‘அடத்தா’, ‘ஜிமாசா’ மற்றும் ‘கலாட்டா’ ஆகிய நிறுவனங்களின் இயக்குனரும், தலைமை அதிகாரியுமான திரு. சி.ஆர்.வெங்கடேஷ் (சி.ஆர்.வி) இந்த சென்னை ராக்கர்ஸ் அணியின் உரிமையாளராக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
“தரமான பாட்மிண்டன் ஆட்டத்தை புதுமையான விதத்தில் சினிமா நட்சத்திரங்களுக்கு வழங்க வேண்டும் என்பதே எங்களின் முக்கிய குறிக்கோள்…நட்சத்திரங்கள் தங்களின் பாட்மிண்டன் திறமையை வெளிப்படுத்த சிறந்ததொரு தளமாக இந்த ‘செலிபிரிட்டி பாட்மிண்டன் லீக் போட்டி விளங்கும்…அதுமட்டுமின்றி, பாட்மிண்டன் விளையாட்டில் சாதிக்க துடிக்கும் பல இளம் விளையாட்டு வீரர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் கடமையும் எங்களுக்கு பெரிதும் இருக்கிறது…அதன் ஆரம்ப புள்ளியாக, கல்லூரிகளில் இருந்து சில மாணவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு தேசிய அளவில் நடைபெற இருக்கும் பாட்மிண்டன் போட்டியில் பங்குபெற தேவையான பயிற்சியும், வழிகாட்டுதலையும் தர முடிவு செய்து இருக்கிறோம்…” என்கிறார் வெங்கடேஷ்.
மேலும் ‘சென்னை ராக்கர்ஸ்’ அணியை பற்றி அவர் கூறுகையில், “தமிழ் திரையுலகில் ‘சாக்லேட் பாய்’ என்று அனைவராலும் அழைக்கப்படும் நடிகர் மாதவன் எங்கள் அணியின் விளம்பர தூதராகவும், நடிகை அமலா பால் எங்கள் அணியின் ஊக்குவிப்பாளராகவும் இருப்பது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக
இருக்கிறது…’செலிபிரிட்டி பாட்மிண்டன் லீக் சீசன் – ஒன்றில் விளையாட இருக்கும் எங்கள் ‘சென்னை ராக்கர்ஸ்’ அணியில், நடிகர் ஆர்யா (கேப்டன்), அபிநய் வட்டி, அமிதாஷ், பரத், முன்னா, பிரசன்னா, சாந்தனு, வைபவ், காயத்ரி, இனியா மற்றும் ரூபா மஞ்சரி ஆகியோர் விளையாட இருக்கின்றனர்…”
ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகையும் இந்த ‘செலிபிரிட்டி பாட்மிண்டன் லீக்’ (சீசன் – 1) போட்டி ஒன்று திரட்டி இருக்கிறது . தற்போது மாநில அளவில் விமர்சையாக நடைபெற இருக்கும் இந்த போட்டி, அடுத்த சீசனில் தேசிய அளவில் நடைபெறும் போட்டியாக விரிவடையும் . கோலாலம்பூரில் நடைபெற இருக்கும் இறுதி போட்டி, தென்னிந்திய சினிமாவின் புகழை மலேஷியா நாடெங்கும் எடுத்துச் செல்ல இருக்கிறது…மலேஷிய ரசிகர்கள் ஒவ்வொருவரும் தங்களின் அபிமான நட்சத்திரங்களை ஊக்குவிக்க ஒன்று திரள்வார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
“கடந்த சில காலமாகவே விளையாட்டு துறையும், பொழுபோக்கு துறையும் தான் வர்த்தகங்களில் பெரும் லாபத்தை திரட்டி வருகிறது…சென்னை ஏஞ்சல் இன்வெஸ்ட்டர்ஸ்’ மற்றும் ‘இந்தியன் ஏஞ்சல் நெட்வர்க்’ நிறுவனங்களில் ஒரு அங்கமாக செயல்பட்டு வருவது மூலம் தான் நான் உணர்ந்து கொண்டேன்…இப்படி இந்த இரண்டுக்குமே இவ்வளவு சிறப்பு இருக்கும் போது, இந்த இரண்டையும் ஒன்று சேர்த்தால் நிச்சயமாக அந்த சிறப்பு இரட்டிப்பாகவும் என கருதி தொடங்கப்பட்டது தான் இந்த ‘செலிபிரிட்டி பாட்மிண்டன் லீக்’. குறைந்தபட்சம் எண்பது சதவீத சினிமா நட்சத்திரங்களாவது தங்களின் உடம்பை ஆரோக்கியமாக வைத்து கொள்வதற்காக பாட்மிண்டன் விளையாடுகிறார்கள். ‘செலிபிரிட்டி பாட்மிண்டன் லீக்கை தொடங்க பேச்சுகள் ஆரம்பித்ததுமே, இந்த நான்கு அணிகளின் உரிமையாளர்களிடம் இருந்தும், பிரபல நட்சத்திரங்களிடம் இருந்தும் எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ‘செலிபிரிட்டி பாட்மிண்டன் லீக்கின் மத்திய வருவாயில் இருந்து பதினைந்து சதவீதம் அணியின் உரிமையாளர்களுக்கு வழங்கப்படும். இதில் அணியை வாங்குவதற்கான செலவுகள், விளம்பர செலவுகள், ஸ்பான்சர் என மற்ற செலவுகள் எதுவும் இதில் அடங்காது…அதே போல் தங்களின் அணிக்காக நட்சத்திரங்களை வரவழைக்கும் செலவு, நிகழ்ச்சி நடத்த உண்டாகும் செலவுகள், அணிக்கான உரிமை கட்டணம் என இதர செலவுகள் அனைத்தும் அணியின் உரிமையாளர்கள் தான் பார்த்து கொள்ள வேண்டும்….” என்று கூறுகிறார் ‘செலிபிரிட்டி பாட்மிண்டன் லீக்’ போட்டியின் தலைவரும், நிறுவனருமான திரு. ஹேமச்சந்திரன்.
சென்னை, கொச்சின், ஹைதெராபாத் மற்றும் கர்நாடகா என பல்வேறு மாநிலங்களில் நடைபெற இருக்கும் ‘செலிபிரிட்டி பாட்மிண்டன் லீக் – 2016’ போட்டியின் இறுதி ஆட்டமானது, மலேஷியா நாட்டில் உள்ள கோலாலம்பூர் நகரத்தில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.