சேரனின் ‘சினிமா டு ஹோம்’ முறையில் படங்கள் அறிமுகவிழா நேற்று மாலை நடந்தது.
விழாவில் சேரன் தன் இந்த திட்டத்தை யோசித்தது,தொடங்கியது, ஆய்வு செய்தது, களப்பணியாற்றியது. உருவம் பெற்றது வரை விடியோக்காட்சிகளைக் காட்டி நேரிலும் விளக்கினார்.
இது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும் என்று பேசிய அனைவரும் கூறினார்கள்.
தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.தாணு,தயாரிப்பாளர்கள் பி.எல்.தேனப்பன், டி.சிவா,, யூடிவி தனஞ்ஜெயன் பிரமிட்நடராஜன், எச்.முரளி மன்னன், கதிரேசன், சிவசக்தி பாண்டியன், அழகன் தமிழ்மணிநடிகர், சங்கத் தலைவர் சரத்குமார், இயக்குநர் சங்கத் தலைவர் விக்ரமன், இயக்குநர் சங்கத் செயலாளர் ஆர்.கே. செல்வமணி, இயக்குநர்கள் கே.எஸ்.ரவிகுமார், தங்கர்பச்சான், கே.பாக்யராஜ், அமீர், பேரரசு, மனோஜ்குமார், ஈ.ராமதாஸ், சிபிராஜ், கிட்டி, விஜயகுமார், எம்.எஸ்.பாஸ்கர்,, சித்தார்த்,ஜெயப்ரகாஷ், நடிகை ரோகிணி ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர். சேரனின் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
விழாவில் ஒவ்வொருவர் பேசும்போது சேரன் மகிழ்ச்சியில் நெகிழ்ச்சியில் நெகிழ்ந்து உணர்ச்சிப் பெருக்கில் கண்ணீர் விட்டார்.