|ஜங்கிள் புக் ‘ பட அனுபவங்கள் :’மெளக்லி’யாக நடித்த நீல் சேத்தி

neel-sethi-mogli-zoom

 

“The jungle book”Mowgli”ல் முக்கிய கதாபாத்திரமான ‘மெளக்லி’யாக ‘நீல் சேத்தி’
நடித்திருக்கிறார்.12வயதான ‘நீல் சேத்தி’,மும்பையைப் பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தைச் சார்ந்தவர். இவர் தற்போது தனது குடும்பத்துடன் அமெரிக்காவின் நியூயார்க்கில் வசித்து  வருகிறார்.அவ்வளவு எளிதில் இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்துவிடவில்லை.

சுமார் 2000 பேருக்குமேல் கலந்து கொண்ட நேர்காணலில் டைரக்டர் ஸ்டீவ் ஃபேவ்வரூ -வால் மெளக்லி என்ற கதாபாத்திரத்திற்காக ‘நீல் சேத்தி’ தேர்தெடுக்கப்பட்டார்.

படத்தின் புரோமோஷனுக்காக இந்தியா வந்த குழந்தை நட்சத்திரம் ‘நீல்சேத்தி’, டிஸ்னி இந்தியாவின் நிர்வாக இயக்குநர் சித்தார்த் ராய் கபூர் மற்றும் படத்தின்(இந்தி) இசையமைப்பாளர் விஷால் பரத்வாஜ் உடன் இணைந்து படம் பற்றிய தனது அனுபவங்களை  பிரத்யேகமாக நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

முன்னதாக,”The Jungle Book ” ன் ஆசிரியர் ருத்யார்டு கிஃப்ளிங் இந்த புத்தகத்தை எழுதும் போது சென்று வந்த,மும்பையின் பாரம்பரிய கோட்டைகளையும்,புராதானச் சின்னங்களையும் அவர் பார்வையிட்டார்.

அவர் பேசும்போது; ‘மெளக்லி’யாக இந்தியா வந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.
இந்தியாவில் வசிக்கும் எனது பாட்டி,தாத்தாவின் மூலம் நான் நிறைய கதைகளைக் கேட்டிருக்கிறேன். அதிலும் குறிப்பாக காடு,மற்றும் விலங்குகள் சம்பந்தப்பட்ட கதைகள் கேட்கும்போது
எப்போதும் எனக்குள் ஒருவித மகிழ்ச்சி தோன்றும். இந்தப் படத்தில் நடிப்பதற்காகநான் தேர்தெடுக்கப்பட்ட
பொழுது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.

இந்தியாவைக் கதைக்களமாகக் கொண்ட இந்தப் படத்தில் நான் நடிப்பதில் எனது குடும்பத்தினரும் மகிழ்ச்சியடைந்தனர்.

என்னுடைய முதல் படத்திலேயே,நான் கதைகளில் மிகவும் ரசித்த சிறுத்தையுடனும்(பகீரா)
கரடியுடனும்(பாலு)இணைந்து நடித்துள்ளேன். அவைகளுடன் இணைந்து நடிக்க முதலில் பயமாகத்தான் இருந்தது,நாட்கள் செல்லச்செல்ல நான் அவைகளுடன் சேர்ந்து விளையாட ஆரம்பித்துவிட்டேன்.

THE JUNGLE BOOK - (L-R) MOWGLI and GRAY. ©2015 Disney Enterprises, Inc. All Rights Reserved.சர்வதேச அளவில் இந்தியாவின் கதைகளை முதன்முறையாக இந்தப்படத்தின் வாயிலாக முன்னிறுத்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது.

இந்தியமக்களும் இந்த காட்டிற்குள் வந்து எங்களை ரசித்து விட்டுச் செல்வார்கள் என  நம்புகிறேன்”.
என்று குழந்தை நட்சத்திரம் நீல் சேத்தி கூறினார்.

இந்தியாவை கதைக் களமாகக் கொண்டிருப்பதால்,பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களான
பிரியங்கா சோப்ரா,இர்பான், நானா படேகர், ஃஷெப்பாலி ஷா,மற்றும் ஒம் பூரி ஆகியோரது குரல்களை
படத்தின் முக்கிய கதாபாத்திரங்களுக்கு பயன்படுத்தி இருக்கிறார்கள். இதே கதாபாத்திரங்களுக்கு
ஹாலிவுட்டில் ஸ்கேர்லெட் ஜொகான்சன்,பில் முர்ரே,இட்ரிஸ் எல்பா,லுபிட்டா நியாங்கோ மற்றும் பென் கிங்ஸ்லி ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர்.

சமீபகாலத்தில் அதிகமாக எதிர்பார்க்கப்படும் இந்தப் படம் உலகம் முழுதும் ஏப்ரல் 14ல் திரைக்கு வருகிறது.
கதைக்களம் இந்தியாவாக இருப்பதால் ஒரு வாரம் முன்னதாக,இந்தியாவில் ஏப்ரல் 8ம் தேதியன்று
வெளியாகிறது.