தன் பட விழாவுக்கே வராத ஜெய்: ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ பட விழா சோகம்!

eva1‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ படத்தின் ஊடக சந்திப்பு இன்று மாலை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஆடியோவைத் தயாரிப்பாளர் ஷான் சுதர்சன் வெளியிட படக் குழுவினர் பெற்றுக் கொண்டனர்.
படக்குழுவினர் அனைவரும் வந்திருந்த  இந்நிகழ்ச்சிக்கு நாயகன் ஜெய்மட்டும் வரவில்லை.

நாயகன் ஜெய் நிகழ்ச்சிக்கு வரவில்லை என்பது குறிப்பிடத் தக்கது மட்டுமல்ல, வருந்தத்தக்கது  மட்டுமல்ல, கண்டிக்கத் தக்கதும்கூட.

நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் ஷான்சுதர்சன் ”என் முதல்படம் ‘சேதுபதி’ போல இதற்கும் ஆதரவு தாருங்கள்” என்றார்.

இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி பேசும் போது ”இது எனக்கு மூன்றாவது படம். “என்றார்.

ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துச்சாமி பேசும் போது”இது ஜெய்க்காக எழுதிய கதை போல பொருத்தமாக இருந்தது  “என்றார்.
.
நடிகர் சூப்பர்குட் சுப்ரமணி பேசும் போது ”நான் 25 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறேன் .இதில் எனக்கு பெரியரோல் “என்றார்.

இயக்குநர் ஆர்.என் ஆர். மனோகர் பேசும் போது “இதில் பங்கு பெற்ற நடிகர்கள் கலைஞர்கள் எல்லாரையும் எனக்கு வாய்த்த அற்புதங்கள் என்று ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ பட இயக்குநர் சொல்வார்’. “என்றார்.
நடிகர் நவீன்பேசும் போது ”இந்தப்பட அனுபவம் அற்புதம். செய்த வேலையைவிட கற்றது அதிகம்.”என்றார்.

ev4நடிகை ப்ரணிதா பேசும் போது ”வாய்ப்புக்கு நன்றி .படம் ஜாலியான அனுபவம். “என்றார்.

நடிகர்  காளி. பேசும் போது ” இதில் நான் ஆட்டோ டிரைவராக நடித்திருக்கிறேன் ஸ்கிப்டைப் படித்த போதே சிரிப்பு வந்தது. “என்றார்.

நடிகர் கருணாகரன் பேசும் போது ”என் வளர்ச்சியில் ஊடகங்களின் பங்கு உண்டு.  இதில் நான் ஒரு பேங்க் கேஷியராக நடித்திருக்கிறேன். “என்றார்.
‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ இயக்குநர்  மகேந்திரன் ராஜமணி பேசும் போது. ”படத்தில் புதிதாக ஒன்றும் சொல்லவில்லை.இதில் பங்கேற்ற எல்லாரும் தங்கள் படம் போல பணியாற்றி எனக்கு உதவி செய்திருக்கிறார்கள். காதலில் தோல்வி யடைந்த ஒருவன் தன் 3 நண்பர்களைப் படுத்துகிற பாடுதான் கதை. விஜய் சார் படம் வரும் பொங்கலுக்குத்தான் இதுவும் வருகிறது- அதை 4 முறை பார்ப்பவர்கள் இதை ஒருமுறை பார்க்கட்டுமே.”என்றார்.

விழாவில் எடிட்டர் கோபிகிருஷ்ணா ,கலைஇயக்குநர் சசி, மேக்கப் மேன் சசிகுமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.