பாகுபலியின் வரலாற்று வசூல் சாதனையை ஒட்டி வெற்றிச் சந்திப்பு நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் டி.சிவாபேசும் போது ” பெருமையுடன் வழங்கும் என்று எதேதோ படத்துக்குப் போடுகிறோம். அதற்கு முழுத்தகுதியான படம் இந்த பாகுபலி
மட்டும்தான்.உண்மையில் பெருமையுடன் வழங்கும் என்று போட்ட ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜாவுக்குத்தான் அந்தப் பெருமை பொருந்தும் அப்படி ஒரு வரலாற்று வெற்றியை எட்டியுள்ளது பாகுபலி படம் ” என்றார்.
ஞானவேல்ராஜா பேசும் போது”படம் வெளியான முதல் நாள் விநியோகஸ்தர்கள் கூட்டம் நடந்தது. 60 பேர் கலந்து கொண்டனர். முதல்நாள் முதல் காட்சியைப்பார்க்க அவ்வளவு கூட்டம். பெரிய நட்சத்திரம் நடித்த படம் மாதிரி கூட்டம். அப்போதே தெரிந்து விட்டது. படம் பெரிய வெற்றி என்று. இதை நேரடியாகத் தமிழ்ப் படமாகவே எடுத்து இருந்தார் ராஜமௌலி. யார் யாரோ டப்பிங் படம் என்று கூறினாலும் மக்கள் தமிழ்ப் படமாகவே ஏற்றுக் கொண்டார்கள். ” என்றார்.
நாயகன் பிரபாஸ் பேசும் போது ” தமிழ் மக்களுக்கு நன்றி ” என்று தொடங்கியவர் ” நடிக்கும் போது நிறைய அடி பட்டது. விபத்து ஏற்பட்டது பலமுறை சர்ஜரி செய்து கொண்டேன்.
சத்யராஜ் சார் தலையில் நான் கால் வைத்து நடிக்கும் காட்சியில் நான் தயங்கினேன். அவர் தயங்காமல் என் காலை எடுத்து வைத்துக் கொண்டார். வியந்து விட்டேன். ” என்றார்.
நிகழ்ச்சியில் ரம்யா கிருஷ்ணன், இயக்குநர்கள் லிங்குசாமி, ராஜேஷ்., சாம் ஆண்டர்சன், ஜி.வி.பிரகாஷ், தயாரிப்பாளர்கள் சி..வி.குமார், வம்சி, பிரசாத், பிரபாத். அபினேஷ் இளங்கோவன் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.