நடிகர் சங்கம் பற்றி பரவும் புரளி : நடிகர் சங்கம் அறிக்கை

helpநடிகர் சங்கம் பற்றி புரளி  கிளப்பி பரப்பப்படுவதாக  நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது;

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் சங்கத்தால் எந்த நிவாரணமும்
செய்ய இயலாது , அரசு தான் அதை செய்ய வேண்டும் என்று நடிகர் சங்கத்தை
சேர்ந்த யாரோ  பேட்டி அளித்ததாக கூறி ஒரு புரளி பரவி வருவதாக
தெரியவந்துள்ளது. அது முற்றிலும் தவறான தகவல், நடிகர் சங்கத்தை சேர்ந்த
யாரும்  யாருக்கும் பேட்டி அளிக்கவில்லை. மழையால் பாத்திக்கப்பட்ட
மக்களுக்கு நடிகர் சங்கம் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர்மாவட்டத்தைச் சார்ந்த,

சிதம்பரம் தாலுக்காவில் அமைந்துள்ள கரிவேட்டை என்ற
கிராமத்தைச் சார்ந்த மக்களுக்கு “The Environmentalist Foundation of
India “ என்ற NGO மூலமாக நமது தென்னிந்திய நடிகர் சங்கம் முதற்கட்ட
பணியாக சில உதவிகளை மேற்கொண்டுள்ளது.

அதில் அடிப்படை பொருட்களான அரிசி, பருப்பு ,உப்பு,சர்க்கரை போன்ற சமையல்
பொருட்களும் கரண்டி, தட்டு மற்றும் சமையல் பாத்திரங்களும் வழங்குவதற்கு
தேவையான பாய், பெட்ஷீட் போன்றவையும் மாற்றுத்துணிகளுக்காக புடவை, வேட்டி
மற்றும் டி.சர்ட் போன்ற பொருட்களும் அனுப்பப்பட்டுள்ளன.

இதற்காக நடிகர் சங்கத்தோடு கைகோர்த்து திரு.எஸ்.வி.சேகர்,
திரு.பூச்சிமுருகன், திரு.மனோபாலா மற்றும் திருமதி.ரோகிணி அவர்கள்
உதவியுள்ளனர். மேலும் , நடிகர் திரு. அருள்நிதி அவர்கள் 1,000
பெட்சிட்டுகள் அந்த மக்களுக்காக வழங்கியுள்ளார்.

இந்த நிகழ்சிக்காக கடந்த மூன்று நாட்களாக நமது சங்கத்தைச் சார்ந்த
திருமதி.குட்டிபத்மினி ,செல்வி.கோவைசரளா, திருமதி.லலிதகுமாரி,
திருமதி.சோனியா,திரு.மனோபாலா,திரு.பசுபதி,திரு.உதயா,திரு.ஹேமச்சந்திரன்
,திரு.அயுப்கான் மற்றும் சங்க நிர்வாகிகள் ,அலுவலக மேலாளர்
திரு.வி.பாலமுருகன் மற்றும் அலுவலக ஊழியர்கள் ஆகியோர் பாடுபட்டுள்ளானர்
என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் சென்னையில் கோட்டூர்புரத்தை சார்ந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட
மக்களுக்கு நமது நடிகர்சங்க செயற்குழுஉறுப்பினர்கள் திரு.அயுப்கான்
மற்றும் திரு.ஹேமச்சந்திரன் மூலமாக உதவிகள் செய்யப்பட்டுள்ளன

இவ்வாறு நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது