நடிகை லிஸி, இயக்குநர் பிரியதர்ஷன் விவாகரத்து கோரி விண்ணப்பித்துள்ளனர்.இது தொடர்பாக நடிகை லிஸி கூறியிருப்பதாவது
”24 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு நானும் திரு பிரியதர்ஷன் அவர்களும் முழு மனதுடன் பிரிய முடிவெடுத்துள்ளோம் என்பதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
எங்கள் பிரிவை சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்த இன்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வேண்டி விண்ணப்பித்துள்ளேன். எங்களது இந்த முடிவை எங்களின் குழந்தைகளும், நண்பர்களூம் அறிவார்கள்.
இந்த கடினமான காலத்தில் தாங்கள் அனைவரும் எங்களின் கவலை அறிந்து, எங்களின் தனியுரிமை மதித்து செயல்படுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.”இவ்வாறு நடிகை லிஸி கூறியுள்ளார்.