மேடைமெல்லிசை மற்றும் தொழில்நுட்ப க்கலைஞர்கள் தலைமைசங்கம் சார்பாக 30.06.2015 செவ்வாய்க்கிழமையன்று காலை 10 மணிக்கு சென்னை தி.நகர்வாணிமஹாலில் “இசைஞானிஇளையராஜா” அவர்கள்அழைப்பின் பேரில் மெல்லிசைத்துறை பற்றிய ஒரு ஆலோசனைக்கூட்டம்நடைபெற்றது.
இப்பெருமைக்குரிய கூட்டத்திற்கு தமிழ்நாடு முழுவதிலிருந்தும் மெல்லிசைக்குழு நடத்தும்தலைவர்கள் மற்றும் மாவட்ட சங்கநிர்வாகிகள் கலந்து கொண்டனர். விழாவில் இசைஞானி இளையரஜா பேசியது,
“எனக்கு முன்னால் நிர்வாகிகள் பேசியதைக் கேட்டிருப்பீர்கள். பல்வேறு கருத்துக்கள் உங்கள்மனதில் இருக்கும். நான் உங்களிடம் பணம்கேட்டு வந்திருக்கிறேன் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம்.
நான் எப்போதும் கொடுப்பவன் கேட்பவன் அல்ல அதுஉங்களுக்கே தெரியும். எத்தனையோ ஆயிரம் பாடல்களை உங்களுக்காக வழங்கியவன்.
இப்போதைக்கு நான் சந்திக்க வந்திருக்கின்ற காரணம் என்னவென்றால்
என்னுடைய பாடல்களையோ மற்றவர்கள் பாடல்களையோ நீங்கள்பாடும் போதுசட்டப்படி அதற்கு அனுமதி பெறவேண்டும் என்பது நடைமுறை.
இதை உங்களிடம் இருந்து பெறுவதற்காக இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், பாடலாசிரியர்கள் இணைந்து உருவாக்கப்பட்ட அமைப்புதான் ஐ.பி.ஆர்.எஸ்.
இதை சேகரிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஐ.பி.ஆர்.எஸ் நிர்வாகம் தவறான கணக்குகளைக்காட்டி அந்தஅமைப்பில் உறுப்பினர்களாக உள்ள என்போன்றவர்களை ஏமாற்றிவருகிறது. என்பாடல்களுக்காக அவர்கள் வசூலிப்பதில் பத்து சதவீதம்கூட எனக்கு வந்து சேர்வதில்லை. எந்த இசைஅமைப்பாளருக்கும் நியாயமாய் சேரவேண்டியவை சென்று சேர்வதில்லை.
என்னை சந்திக்கும் ஒவ்வொருவரும் இசைநிகழ்ச்சியில் உங்கள் பாடல்களைத் தான் ஐம்பதுசதவீதத்திற்கு மேல் பாடுகிறேன் என்று சொல்கிறீர்கள். அப்படிப் பார்த்தால் எனக்கே ஐந்து சதவீதமோ பத்துசதவீதமோ கொடுத்துவிட்டு அந்தசெலவு இந்தசெலவு என்று கணக்குகாட்டி ஏமாற்றுகிறார்கள் ஐ.பி.ஆர்.எஸ் நிர்வாகத்தினர். எனக்கே இப்படிஎன்றால் மற்ற இசையமைப்பாளர்களுக்கு என்னகொடுப்பார்கள்?
அதேபோல்அவர்களிடம் இத்தனையாவது வருடம் வந்தபாடலுக்கு இத்தனைரூபாய் என்று நிர்ணயம் செய்துள்ளீர்களா ? இந்த உறுப்பினரின் பாடலுக்கு இத்தனை ரூபாய் என்று விதிமுறை இருக்கிறதா ? இது போன்ற கேள்விகள் எதற்குமே விடைஇல்ல. அவர்கள் கொடுப்பதை வாங்கிக் கொள்ள வேண்டுமாம். என்ன நியாயம்இது ?
அதனால் அந்த நிர்வாகத்தின் செயல்பாடுகளின்மேல் நம்பிக்கைஇல்லாததால் அந்தஅமைப்பிலிருந்து நான் விலகிக்கொள்ள முடிவு செய்து விட்டேன்.
எவனோ ஒருவன் என்பெயரைசொல்லி பணம் வசூலித்துஉங்களையும் என்னையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறான். அதனால் உங்களிடமே நேரடியாக இதைசொல்லி என்பாடல்களுக்கான தொகையை என்அலுவலகத்தில் நேரடியாக செலுத்தசொல்லலாம் என யோசித்து உங்களை அழைத்தேன்.
அதேபோல் இவ்வளவு தொகை செலுத்தவேண்டும் என்று நான் உங்களைக் கட்டாயப்படுத்த வில்லை. நீங்கள் சேர்ந்து முடிவெடுத்துக் கொள்ளுங்கள். மீண்டும் சொல்கிறேன் நான் கேட்பவன் அல்ல கொடுப்பவன். நானும் இதுபோன்ற மேடைகளில் இசைநிகழ்ச்சி, நாடகத்தின் பின்னணிஇசை என்று வாசித்து இசையமைப்பாளனாக வந்ததால் உங்கள் உணர்வுகள் எனக்குந ன்றாகத்தெரியும். கண்ணுக்குத்தெரியாமல் ஒருஅமைப்பு நம்மைஏமாற்றிக்கொண்டிருப்பதால் நான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன்.
மற்றவர்களின் பாடல்களுக்கும் நீங்கள் சம்பந்தப்பட்டவர்களுடன் அமர்ந்து பேசி முடிவெடுங்கள்.
குறிப்பாக ஒருநிகழ்ச்சியில் எத்தனை பாடல்கள்பாடுகிறீர்கள் அதற்குஎவ்வளவுகொடுக்கலாம் என்று நீங்களும் சினிமியூசிக்யூனியனுடன் அமர்ந்துபேசியும் முடிவெடுக்கலாம். ஐ.பி.ஆர்.எஸ் மூலம் எத்தனைபேர் பாதிக்கப்பட்டிருக்கிறோம். இந்தகூட்டத்தின் மூலம் இந்தபிரச்னையை நாமே தீர்த்துக்கொள்வோம்.
இல்லாவிட்டால் நாமே ஒரு புதியஅமைப்பை உருவாக்கிக்கொள்ளலாம்.
இப்போதேகூ டஒருகமிட்டியை போடுங்கள் நாம் ஏன் மற்றவர்களிடம் ஏமாறவேண்டும்.
அதேபோல் இந்தக்கூட்டம் நடத்தப்படுவது பற்றி சிலகேள்விகள் உள்ளன
இதை ஏற்பாடு செய்தவர்கள் அவ்வப்போது கண்களில் தென்படுகிறார்கள், தொடர்ந்து பல நல்லதிட்டங்களை செய்கிறார்கள். அதனால் இவர்களிடம் சொல்லி இந்தகூட்டத்தை ஏற்பாடுசெய்யச் சொன்னேன்.
சிலபேருக்கு இதில்வருத்தமுண்டு. எதிரில் வந்தால்தானே பொறுப்புகளை ஒப்படைக்கமுடியும். எதையும் செய்யாதவர்களிடமும், கண்ணில் தென்படாதவர்களிடமும்எ ப்படிசெய்யச் சொல்லமுடியும்.
எல்லா இடங்களிலும் இருப்பதுபோல் உங்கள்அமைப்புகளிலும் சிலகருத்து வேறுபாடுகள்இருக்கின்றன. முதலில்நீங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்துசெயல்படுங்கள் அப்போதுதான் ஐ.பி.ஆர்.எஸ் போன்றஅமைப்புகளை சரியாக எதிர்கொள்ளமுடியும்.
மீண்டும் ஒருமுறை வேண்டுமானாலும் இதுபோல் ஒரு கூட்டத்தினை ஏற்பாடு செய்யுங்கள். ஒரு குழுத்தலைவர் விடாமல் வரவழையுங்கள் நான் மீண்டும் வருகை தந்து இது பற்றி உங்களிடம் பேசுகிறேன்.
பாபநாசம் சிவன், டி.ஆர்.மகாலிங்கம், ஜி.ராமநாதன், தக்ஷிணாமூர்த்தி, எம்.எஸ்.ஞானமணி, எஸ்.எம்சுப்பையாநாயுடு, கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் இன்றைக்கு இருக்கின்ற இசையமைப்பாளர்கள் வரைஅனைவருக்கும் பலன் கிடைக்கட்டும். நம்முடன் இருந்தவர்களும் இருப்பவர்களும் பயன்பெற நாம் பாடுபடுவோம்.
இங்கே அறிவிப்பாளர் பேசும் போது ஏழை இசைக்கலைஞர்கள் என்று குறிப்பிட்டார். இசைக்கலைஞர்கள் எவருமே ஏழை இல்லை உலகிலேயே தினமும் தான்செய்யும் தொழிலின் போதுமகிழ்ந்து செய்பவர்கள் இசைக்கலைஞர்களே. சாப்பாடு இல்லாவிட்டால் கூட ஒருபாடலை தனக்குள்ளாகவேபா டிசந்தோஷப்பட்டு திருப்திஅடைபவன் இசைக்கலைஞன். உதாரணத்திற்கு ஷிவசத்யாய…. பாடலை பாடிப்பாருங்கள் உங்களுக்குத்தெரியும். மற்ற மனிதர்களைக் காட்டிலும் மகிழ்ச்சியாய்இருப்பவர்கள் நாம்மட்டுமே என்பதுபுரியும்.
இந்தக்கூட்டத்தினை ஏற்பாடு செய்த எல்லோருக்கும் நன்றி.
இந்த ஐ.பி.ஆர்.எஸ் விஷயத்திற்கு விரைவாக நீங்கள்முடிவெடுங்கள். சங்கத்திற்கும் உறுப்பினர்களுக்கும் என்வாழ்த்துக்கள் ’ என்றார் இளையராஜா
விழாவில் சங்கத்தின் தலைவர் நந்தகுமார், துணைத் தலைவர் பார்த்திபன், செயலாளர் ஜெரோம். பொருளாளர் சாய்சுரேஷ் ,அபஸ்வரம்ராம்ஜி, ஸ்ரீதர் மற்றும். சிவராஜ்ஆனந்த்ஆகியோர்கலந்து கொண்டனர்.