படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பாலையா, ஆச்சர்யத்தில் குதூகலித்த விஜய் தேவரகொண்டாவின் LIGER ( saala Crossbreed ) படக்குழு !
தெலுங்கு திரையுலகில் வெற்றி நாயகனாக தனது முத்திரையை பதித்திருக்கும் இளம் ஹீரோ விஜய் தேவரகொண்டா நடிக்கும் LIGER ( saala Crossbreed ) படத்தை கமர்ஷியல் கிங் இயக்குநராக புகழப்படும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்குகிறார். இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு கோவாவில் துவங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு சண்டை கலைஞர்கள் பங்குகொள்ள, படத்தின் அதிரடியான சண்டைக்காட்சிகள் மற்றும் படத்தின் மிக முக்கியமான காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், படப்பிடிப்பு தளத்திற்கு, எதிர்பாராத சிறப்பு விருந்தினர் வந்து, படக்குழுவினர் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நரசிம்மா நந்தமூரி பாலகிருஷ்ணா படப்பிடிப்பை பார்வையிட்டு குழுவினரை வாழ்த்தியுள்ளார். அவர் நடிக்கும் Akhanda படத்தின் படப்பிடிப்பும் கோவாவுக்கு அருகில் தான் நடைபெற்று வருகிறது.
படத்திற்கு போடப்பட்டிருந்த பிரமாண்ட செட்டை பார்வையிட்ட பாலகிருஷ்ணா தயாரிப்பாளர்களை வியந்து பாராட்டினார். படத்தை மிகப்பிரமாண்ட வகையில் உருவாக்கும் தயாரிப்பாளர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார். விஜய் தேவரகொண்டாவின் வித்தியாசமான லுக் தனக்கு மிகவும் பிடித்துள்ளதாக தெரிவித்த பாலகிருஷ்ணா படக்குழுவினரை ஆசிர்வதித்துடன், படம் ப்ளாக்பஸ்டர் வெற்றியை பெற தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
நடிகர் விஜய் தேவரகொண்டா முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில், மார்ஷியல் ஆர்ட்ஸ் கலைகளில் சிறப்பு பயிற்சி எடுத்து, இந்த ஸ்போர்ட்ஸ் ஆக்சன் திரில்லர் திரைப்படத்தில் நடித்துள்ளார். பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே இப்படத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடிக்கிறார்.
Puri connects நிறுவனத்துடன், இந்த பொழுதுபோக்கு ஆக்சன் திரைப்படத்தினை பாலிவுட்டின் முன்னணி நிறுவனமான Dharma Productions இணைந்து தயாரிக்கிறது.
இந்தியளவில் பன்மொழி திரைப்படமாக உருவாகும் இப்படத்தினை Puri connects மற்றும் Dharma Productions நிறுவனங்கள் இணைந்து மிகப்பெரும் பட்ஜெட்டில் மிகப்பிரமாண்டமான படைப்பாக உருவாக்குகின்றனர்.
மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவினை விஷ்ணு சர்மா செய்கிறார். தாய்லாந்தை சேர்ந்த ஸ்டண்ட் கலைஞரான Kecha சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளார்.
பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர், அபூர்வா மேத்தா இணைந்து இப்படத்தினை தயாரிக்கிறார்கள்.
ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய் மிக முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். லைகர் (Liger) படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மொழிகளில் உருவாகிறது.