கேபிடல் பிலிம் ஒர்க்ஸ் தயாரிக்கும் ‘மூணே மூணு வார்த்தை’ படத்தை மதுமிதா இயக்குகிறார்.
இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பனிகொட்டும் இரவில் பால் வண்ண ஒளியில் ராயப்பேட்டை ஒய்எம் சிஏ மைதானத்தில் வெட்டவெளியில் இன்று நடைபெற்றது. ஆடியோவை கே.பாக்யராஜ் மற்றும் தயாரிப்பாளர் சாமிநாதன் வெளியிட்டனர்.
விழாவில் கே.பாக்யராஜ் பேசும்போது “நாங்க படத்துக்கு கதை விவாதம் செய்யும் போது பனசை மணியன் என்று ஒரு எழுத்தாளர் கலந்து கொள்வார்.
விவாதத்துக்கு வந்தவர் மூணே மூணு கேள்விகள் கேட்பார்.
முதல் கேள்வி இந்தப் படத்துக்கு எனக்கு எவ்வளவு சம்பளம்?
இரண்டாவது கேள்வி இப்போ எவ்வளவு தருவீர்கள்?
முன்றாவது கேள்வி மீதியை எப்போது தருவீர்கள்? அது தெரிந்ததும் விவாதம் தொடங்கலாம் என்பார். இந்தப் படம்’ மூணே மூணு வார்த்தை’.
நான் இதில் நடித்துள்ளேன். மதியம்2 மணி முதல் இரவு 2 மணி வரை இடைவிடாது உழைத்த இளைஞர்களை பார்த்து வியந்தேன். ” என்றார்.
நிகழ்ச்சியில் எஸ்பிபி சரண்,நடிகர்கள் படவாகோபி ,எம்.எஸ். பாஸ்கர், ரோபோ சங்கர், இசையமைப்பாளர் கார்த்திகேயமூர்த்தி, ஒளிப்பதிவாளர் ஸ்ரீநி ,இயக்குநர் மதுமிதா ஆகியோரும் பேசினார்கள்.
.