‘ஒரு மெல்லிய கோடு’படத்தில் அர்ஜுன் நாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடம் ஒன்றில் ஷாம் நடிக்கிறார். கதாநாயகியாக அக்ஷாபட் நடிக்கிறார். மற்றும் மனிஷாகொய்ராலா ரவிகாளே, ஜீன், அருள்மணி ஆகியோர் நடிக்கிறார்கள்.
இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.
எடிட்டிங் – K.V.கிருஷ்ணாரெட்டி
ஒளிப்பதிவு – சேதுஸ்ரீராம்
நடனம் – ராதிகா, விட்டல்
கலை – ஆனந்தன்
நிர்வாக தயாரிப்பு – இந்துமதி, தனஜெய் குன்டப்பூர்
எழுதி இயக்குபவர் – A.M.R. ரமேஷ்
தயாரிப்பு மேற்பார்வை – அண்ணாமலை
அக்ஷயா கிரியேசன்ஸ் சார்பில் பிரமாண்டமாக இப்படம் தயாராகிறது.
படம் பற்றி இயக்குநர் A.M.R.ரமேஷிடம் கேட்டோம்…
படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து விட்டது..டப்பிங் மற்றும் இதர பணிகளுமே முடிவடைந்து விட்டது. டப்பிங் மற்றும் இதர பணிகளுமே முடிவடைந்து விட்டது. பின்னணி இசை சேர்ப்பு வேலைகள் மட்டுமே இருக்கு. படு விறுவிறுப்பான திரைக்கதை மக்களை திக்குமுக்காடச் செய்யும். இப்படத்திற்காக ஷாம் – மனிஷாகொய்ராலா பங்கேற்க
“ யார் இந்த
வெல்வெட் கவிதை
நெஞ்சில் பூகொட்டும் பறவை “ என்ற பாடல் காட்சியும்
ஷாம் – அக்ஷாபட் பங்கேற்க
“ ஒரு மெல்லிய கோடு மிக துல்லியமாக “ என்ற பாடல் காட்சியும் மிக பிரமாண்டமாக பாங்காக்கில் படமாக்கப்பட உள்ளது.
இதற்காக ஷாம் – மனிஷா கொய்ராலா – அக்ஷாபட் நடன இயக்குநர் ராதிகா உட்பட நாங்கள் பாங்காக் போகிறோம்.படப்பிடிப்பு நாளை முதல் பாங்காக்கில் நடக்கிறது என்றார். . படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வருகிறது.