சிங்கப்பூரைச் சேர்ந்த இசையமைப்பாளர் , ராப் பாடகர் மற்றும் பாடல் ஆசிரியரான கிரிஷ்செனோ (Krisheno) எனும் இளைஞர் அவரது சென்னை நண்பர்கள் மற்றும் பாடகர்களாகிய கேலப் ஜேக்கப் (Caleb Jacob) மற்றும் கெவி ஜே (Kevi-J) இணைந்து உருவாக்கியதுதான் மாமிபாய்ஸ் (Mamiboys) எனும் இசைக்குழு.
இவர்கள் ஹாரிஸ் ஜெயராஸ்,ஸ்ரீகாந்த் தேவா போன்ற தமிழ் தெலுங்கு இசையமைப்பாளர்களுடன் இணைந்து திரைப்பட பாடல்களில் பங்கெடுத்தவர்கள்.
முதன்முதலில் உலகக் கோப்பைக் கிரிக்கெட்டுக்காக சலோ இந்தியா எனும் இவர்களின் தனிப்பாடல், நார்வே சர்வதேச படவிழாவில் விருது பெற்ற படமாகிய ‘ரோடு சைடு அம்பானி’ யில் இடம்பெற்றது.
இது மட்டும் இன்றி பல இன்டர்நேஷனல் (International) போட்டிகளிலும் இவர்கள் விருது பெற்றுள்ளனர்.
சமீபத்தில் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு இவர்கள் வெளியிட்ட பாடல் Empower நல்ல வரவேற்பை பெற்றது.
2013 ல் ‘தம் டீ ‘ எனும் ஆல்பத்தை சென்னை AVM Studios -ல் வெளியிட்டனர். அதில் இடம்பெற்ற பாடல்கள் நல்ல வரவேற்புடன் iTunes, Google play ஆகியவற்றில் ஹிட்டை அள்ளின.
தம் டீக்கான வரவேற்பையும் வெற்றியையும் தொடர்ந்து இதை படமாக்கிடும் முயற்சியில் இறங்கினர். இடையில் நிதிப் பிரச்சனையால் வேலைகள் தடை பட்டன. இப்போது மீண்டும் பணிகள் உயிர் பெற்றுள்ளன.
இந்நிலையில் தனது தம் டீ பாட்டின் Concept திருடி தங்கம் சரவணன் இயக்கியுள்ள அஞ்சல படத்தில் டீ போடு பாடலாக உருவி செருகி உள்ளனர் என்று குற்றம் சாட்டுகின்றனர் மாமிபாய்ஸ் (Mamiboys) குழுவினர்.
இது பற்றிக் கூறும்போது “டீ போடு பாடலையும் விடியோவையும் பார்த்து அதிர்ந்தோம் அப்படியே தம் டீ concept. எங்கள் தம் டீ வீடியோவில் இடம்பெறும் scene அனைத்தும் அஞ்சல டீ போடு வீடியோவில் உள்ளது.
டீ போடு பாடலை பார்த்த எங்களின் ரசிகர்கள் Facebookகில் தங்கள் கோபத்தை #DUMTEAvsTEAPODU எனும் hashtag மூலமாக காட்டி உள்ளனர்.
எங்கள் சார்பாகவும் அனைத்து Independent Artist சார்பாகவும் நாங்கள் நீதி மன்றத்தை அணுகி அஞ்சல திரைப்படத்துக்குத் தடை பெற அஞ்ச மாட்டோம் ”என்கின்றனர் மாமிபாய்ஸ் (Mamiboys) குழுவினர்.