மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் இமயம் பாரதிராஜா “குற்றப்பரம்பரை” எனும் புதிய படத்தை இயக்கவுள்ளார்.
குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்து தன் உயிரை துச்சமென மதித்து, நிராயுதபாணியாக போராடிய மக்கள் மீது ஆங்கிலேயர் அரசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிர் நீத்த தியாகிகளின் போராட்டத்தை பேராசிரியர் இரத்தினகுமார் சேகரித்து வைத்திருந்த பதிவுகளை இயக்குநர் இமயம் பாரதிராஜா உணர்வுபூர்வமாகவும், உயீரோட்டமாகவும் இயக்கவுள்ளார்.
இப்படத்தின் பூஜை மற்றும் படத்தொடக்க விழா இன்று காலை உசிலம்பட்டி அருகிலுள்ள பெருங்காமநல்லூர் என்ற இடத்தில் விமர்சையாக நடைபெற்றது.
இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி,ஈ.ராம்தாஸ்,லிங்குசாமி, பாலாஜி சக்திவேல், சுசீந்திரன், பாண்டி ராஜ், பொன்ராம், எழில், SS ஸ்டான்லி, சரவண சுப்பையா, மகிழ் திருமேனி, ஒளிப்பதிவாளர் கண்ணன், பாடலாசிரியர்கள் நா.முத்துகுமார், கபிலன் வைரமுத்து உள்ளிட்ட பல பிரபலங்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
இப்படத்தின் நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.