
பிரபல இயக்குநர் மணிரத்னத்தோடு பணிபுரிவது திரைத்துறை சார்ந்த அனைவருக்கும் ஒரு கனவாகும். அவரோடு பணிபுரிந்த ஒரு நிகழ்ச்சி அந்த கனவை நிஜமாக்கியது கலை இயக்குநர் அமரனுக்கு. பிரபல இயக்குநரும் வீணை வித்துவானுமாகிய காலம் சென்ற வீணை பாலச்சந்தர் அவர்களுக்கு எடுக்கப்பட்ட விழாவிற்கு பின்புலம் அமைக்க கலை இயக்குநர் அமரனுக்கு வாய்ப்பு வந்தது.
