மணிரத்னத்தோடு பணிபுரிவது கனவு நிஜமானது போன்றது :கலை இயக்குநர் அமரன்

 amaran
பிரபல இயக்குநர்  மணிரத்னத்தோடு பணிபுரிவது திரைத்துறை சார்ந்த அனைவருக்கும் ஒரு கனவாகும். அவரோடு பணிபுரிந்த ஒரு நிகழ்ச்சி அந்த கனவை நிஜமாக்கியது கலை இயக்குநர் அமரனுக்கு. பிரபல இயக்குநரும் வீணை வித்துவானுமாகிய காலம் சென்ற வீணை பாலச்சந்தர் அவர்களுக்கு எடுக்கப்பட்ட விழாவிற்கு பின்புலம் அமைக்க கலை இயக்குநர் அமரனுக்கு வாய்ப்பு வந்தது.
amaran-maniஅந்த விழாவை தலைமை ஏற்று நடத்திய  மணிரத்னத்திற்கு அமரனின் வேலை பிடித்து போக, அவர் இயக்கி கொண்டிருக்கும் ” காற்று வெளியிடை..” படத்திற்கு ஊட்டியில் எடுக்கப்பட்ட பகுதியில் கலை இயக்குநராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. இப்போது ஊட்டியில் அந்த பணி முடிந்து விட்ட நிலையில் நிஜமாகவே கலை இயக்குநர் அமரனுக்கு கனவு நிஜமானது.