மறைந்த இசைமேதை மாண்டலின் யூ. ஸ்ரீனிவாசின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பெருமை, சிறப்பு,அன்பு, மரியாதை, நன்றி,நெகிழ்ச்சியைக காட்டும் விதமாக எஸ்.எஸ்.இண்டர் நேஷனல் மாபெரும் இசை நிகழ்ச்சி ஒன்றை வரும் 28.ஆம்தேதி சனிக்கிழமை மியூசிக் அகாடமியில் நடத்துகிறது.
இந்த இசை சமர்ப்பணம் நிகழ்ச்சியை பிரபல இசைக் கலைஞர்கள் பாடகர்கள் பங்குபெற்று நடத்துகிறார்கள். ‘தி கிரேட்மேன்’டலின் என்பது நிகழ்ச்சியில் பெயர்.பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்தும் மாண்டலின் யூ. ஸ்ரீனிவாசின் சகோதரர் ராஜேஷ் ஆகியோர் முன்னின்று நடத்துகிறார்கள். மாண்டலின் யூ. ஸ்ரீனிவாஸ் பற்றிய குறுந்தகடை பத்மபூஷன் கமல்ஹாசன் வெளியிடுகிறார். இசைஞானி இளையராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார். இந்நிகழ்ச்சி அவரது ரசிகர்களுக்காக நடத்தப் படுகிறது. அனுமதி இலவசம்.
இன்று நடந்த இதற்கான ஊடக சந்திப்பில் எஸ்.எஸ்.இண்டர் நேஷனல் சார்பில் குமணன்,மாண்டலின் ராஜேஷ், தேவி ஸ்ரீபிரசாத் ஆகியோர் கலந்து கொண்டு இத்தகவல்களைக் கூறினார்கள்.
”இது அன்பை நன்றியை நெகிழ்ச்சியைத் தெரிவிக்கும் விழா ”என்றார் எஸ்.எஸ்.இண்டர் நேஷனல் குமணன். ”மாண்டலின் யூ. ஸ்ரீனிவாஸ் அண்ணா எனக்கு சகோதரர் குரு, இசையை மட்டுமல்ல அதன் நுணுக்கங்களை மட்டுமல்ல எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்தவர் அவர்.நான் வாசிக்கும் எந்த கருவியிலும் அவரின் விரல்களைக் காண்கிறேன்.” என்றார் தேவி ஸ்ரீபிரசாத்